2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் போது, சதி நடவடிக்கையில் ஈடுபட சில குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவல்களுக்கமைய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் திறைசேரிக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தற்போது திறைசேரியின் பதில் ஜெனராலினால், திறைசேரி செயலாளர், திறைசேரி பிரதி செயலாளர், நிதி அமைச்சரின் மக்கள் தொடர்பு செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர், திறைசேரியின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிடைத்துள்ள தகவல்களுக்கமைய 2016ஆம் ஆண்டு திறைசேறி பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்கள் மற்றும் பிரிவு இம்மாதம் 7ம், 8ம் திகதிகளில் பாதுகாப்பு பிரிவினால் விசேட சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.
அங்கு அனைத்து திணைக்களத்திற்கும் சொந்தமான அலுவலங்கள் அங்குள்ள மேசை, அலுமாரி உட்பட அனைத்தும் சோதனைக்குட்டுப்படவுள்ளதாகவும், பூட்டப்பட்டுள்ள அனைத்து பொருட்களின் பூட்டினையும் திறக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை திறைச்சேரி பகுதிக்கு வரும் புதியவர்களின் வருகையை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், நிதி அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர், நிதி அமைச்சரின் செயலாளரை தவிர ஏனைய அனைவரின் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
திறைச்சேரி பகுதிகளில் பொலிஸ் நாய்களை ஈடுபடுத்தி இந்த நாட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், குடி நீரில் இருந்து ஆவங்ணங்கள் அனைத்து குறித்த நாட்டுகளுக்கு முன்னர் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.