சிறுபான்மையின மக்களுக்கு நல்ல வரவு செலவுத்திட்டமாக அமைந்துள்ளது - விஜயகலா மகேஸ்வரன்

பாறுக் ஷிஹான்-
லையகம் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள எமது சிறுபான்மையின மக்களுக்கு நல்ல வரவு செலவுத்திட்டமாக இம்முறை வரவுசெலவுத்திட்டமானது அமைந்துள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

கடந்த கால அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு அதிகளவான நிதியை ஒதுக்கியது.அத்துடன் தமக்கு விருப்பமான அமைச்சர்களுக்கு விருப்பமான முறையில் நிதியை ஒதுக்குவார்கள் தன்னிச்சையாகவே செயற்பட்டார்கள். 

ஆனால் இந்த நல்லாட்சி அரசின் ஊடாக கல்வி, போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றிற்கு எந்தவித வேறுபாடின்றி கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளோம். 

குடந்த கால அரசில் மாகாண சபை வாய்கட்டப்பட்டிருந்தது. ஆனால் நல்லாட்சியில் சுதந்திர கருத்துகளை பதிவு செய்யக்கூடியதாக உள்ளது தமது ஆதங்கங்களை வெளியிடக்கூடியதாக உள்ளது. எமது நல்லாட்ச அரசுக்காக எதிர்கருத்து பேசுகிறவர்கள் தமது பிரச்சனைகளை மட்டுமே சொல்கிறார்கள் அதை மட்டும் பாராது நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். 

நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்காகத்தான் வரவு செலவு திட்டம் அமைக்கப்கட்டுள்ளது.

கடந்த அரசை போன்று தனி ஒருவருடைய நலனுக்கும்; தமது கட்சிகளை வளர்பதற்காகவும் உறுப்பிபாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களை கூட்டுவதற்காகவும் வரவு செலவுத்திட்டம் அமைக்கப்படவில்லை. அதனால் பொய் அரசியல்வாதிகள் பாராளுமன்றில் பொய்யாக வீதண்டாவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கேலித்தனம் செய்கிறார்கள். 

கடந்த வருடத்தில் நாம் சிறு சிறு வேலைகளை செய்துள்ளோம் இனிவரும் காலத்தில் பூரணமாக செய்ய வேண்டும்.அதற்கு கூடிய நிதி ஒதுக்கப்ட வேண்டும் .

அதே போன்றே இந்த நல்லாட்சி எமது நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் என்பவற்றுக்கு நிதி ஒதுக்கி தந்துள்ளது. கடந்த கால அரசாங்கம் எதை செய்தது? வடகிழக்கில் 90 ஆயிரம் பெண்களை விதவைகளாக்கினர், 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வீதிகளில் திரியிறார்கள், 9 ஆயிரம் சிறுவர்கள் அனாதரவாக உள்ளார்கள். 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கவீனம் அடைந்துள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவை இந்த அரசில் நிவர்த்தி செய்யப்படவேண்டும். 

மேலும் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும். தெற்கு மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கிறார்களோ அதே போன்று சிறுபான்மையினரும் சந்தோரமாக வாழ வேண்டும். 

எனவே ஓரிரு இனவாதிகளுக்காக பொதுமக்களை வீதியில் இறக்கக்கூடாது. அரசியல் தேவைக்காக நல்லாட்சியை முடக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாட்டு மக்கள் விலை போகக்கூடாது. அவர்களுக்கு விலை போனால் சிறுபான்மையினர் தான் பதிக்கப்படுகிறார்கள். எனவே எமது நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -