முஸ்லிம்களது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் கையளிப்பு..!

இக்பால் அலி-
த்திய மாகாணம் சமய நல்லிணக்கத்திற்கும் இன நல்லிணக்கத்திற்கும் முன்மாதரிமிக்க மாகாண ஆகும். கண்டியில் முஸ்லிம் சிங்கள தமிழ் மக்களும் பரஸ்பர நல்லெண்ணத்துடன் சக வாழ்வுடன் ஒன்று பட்டு வாழ்ந்து வருகின்றார்கள். எல்லாயின மக்கள் மத்தியிலும் சில அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். கண்டியைப் பொறுத்தவரையில் அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்த பீட நாயக்கர் பீடாதிகள் முஸ்லிம் மீது எந்தவிதமான இடையூறுகளும் அநியாங்களை விளைவிக்க இடமளிக்க முடியாது. அவர்களும் எமது நாட்டைச் சோந்தவர்கள். நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் உண்டு. இன்னுமொரு சமயத்தை நிந்தனை செய்ய முடியாது என சமயப் பெரியர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மத நிந்தனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை விடுத்துள்ளார்கள். மனித நேயப் பண்புகளுக்கு மனிதத்துவத்திற்கும் தான் முக்கிய இடம்கொடுத்தல் வேண்டும். இவை எல்லாவற்றும் முக்கிய காரணமாக அமைவது மொழி ரீதியிலான பிரச்சினையாகும். முஸ்லிம் சிங்கள மொழியை கற்று இருப்பது போன்று சிங்கள மக்களும் கட்டாயம் தமிழ் மொழியை அறிந்து இருக்க வேண்டும். நானும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் மிகுந்து ஆர்வத்துடன் உள்ளேன். நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றவன். கண்டி முஸ்லிம்கள் சக வாழ்வு மேம்பாட்டுக்காக எப்பொழுதும் ஒருங்கிணைந்து செயற்படக் கூடியவர்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனனத்தின் ஏற்பாட்டில் கண்டி நகரில் பல்துறை அமைப்புக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் பிரநிதிகள் மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்கவுடான விசேட சந்திப்பில் கலந்து கொண்டதுடன் கண்டி நகரில் இன ஐக்கியமும் நல்லிணக்கம் தொடர்பான மேம்பாட்டுக்கான மகஜர் ஒன்றையும் ஆளுநர் பணிமனையில் வைத்துக் கையளித்தனர்.

கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே. ஆர், ஏ. சித்தீக் தலைமையில் சென்ற குழுவில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், சம்மேளனத்தின் செயலாளர் என்.எம்.எம்.மன்சூர், கண்டி நகர் ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் பாயிஸ், செயலாளர் அஷ்ஷெய்க் சக்கி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் 1200 வருடங்கள் சிங்கள மக்களுடன் மிக நெருக்கமாகவும் ஒற்றுமையாகவும் அன்போடு பழகக் கூடியவர்களாகவும் இதுவரை காலமும் இருந்து வருகின்றனர். சகோதரத்துடனும் நட்புறடனும் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட முஸ்லிம்கள் நாட்டினுடைய பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி பொதுச் சேவைகள் போன்ற சகல விடயங்களிலும் நாட்டுக்காக சிங்கள மக்களுடன் சேர்ந்து பங்களிப்புச் செய்து இருக்கிறார்கள். 

சமீபத்தில் எமது நாட்டில் நிலவிய பிரச்சினைகள் தொடாபாகவும் சுட்டிக் காட்டி முஸ்லிம்களது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி ஒரு மகஜர் ஒன்று அங்கு கையளிக்கப்பட்டது. இந்த மகஜரை கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே.ஆர்,ஏ, சித்திக் கையளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -