வீட்டுத்திட்டத்திலிருந்து தமிழ் குடும்பங்களின் பெயர் நீக்கம் - ஷிப்லி பாறுக் நடவடிக்கை

எம்.ரீ.ஹைதர் அலி-
மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வீடுகள் வழங்கப்படுவதற்காக உள்வாங்கப்பட்டிருந்த நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 11 தமிழ் குடும்பங்கள் தற்போது அவ்வீட்டுத்திட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் சில குடும்பங்களுக்கு மாத்திரம் வீடு திருத்தத்திற்கென 200,000 ரூபா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக இறுதியாக நடைபெற்ற மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறிப்பிட்ட போது “வீடுகள் வழங்குவதற்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 11 தமிழ் குடும்பங்களில் ஒரு சிலருக்கு மாத்திரமே தற்போது திருத்த வேலைக்கான பணம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஏனையவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தகர குடிசைகளில் வாழும் அக்குடும்பத்தினரால் வழங்கப்படும் 200,000 ரூபாய் பணத்தை கொண்டு தகர கொட்டில்களை எவ்வாறு திருத்த முடியும்? மேலும் ஒருசிலர் தமக்கு வீடுகள் வழங்கப்படும் என நம்பி இருந்த குடிசை வீடுகளையும் பிரித்து விட்டு தற்போது நிர்க்கதியான ஒரு நிலையினை எதிர்கொண்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.

மேலும் இதனைத்தொடர்ந்து அன்மையில் குறித்த குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வீடுகளை நேரடியாக பார்வையிட்டதோடு அம்மக்களின் நிலையினையும் கேட்டறிந்துகொண்டார்.

இதற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தற்போது குறித்த பகுதியில் வசிக்கும் வறிய நிலையிலுள்ள 21 குடும்பங்கள் தமக்கான சரியான வீடுகள் இன்றி இருப்பதாகவும் அவர்களுக்கான வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த 21 குடும்பங்களினுடைய வீடுகளையும் மீண்டும் விசேட குழு மூலம் நேரில் சென்று பார்வையிட்டு தகுதியானவர்களை மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் P .S.M. சார்ல்ஸ் அவர்கள் வாக்குறுதியளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -