மாணிக்க மடு மாயக்கல்லி மலையில் அமையப்பெற்றுள்ள புத்தர் சிலை தொடர்பாக அம்பாரை மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் தமனை பொலீஸாரினால் வழக்கு மேலதிக அறிக்கை சமர்பிக்கப்பட்ட பொழுது அதில் உள்ள நில சொந்தக்காரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணியும் மாகாணசபை உறுப்பினறுமாகிய ஆரிப் சம்சுதீன் அவர்கள் இறக்காமமக்களுக்காக தெரிபட்டார்
தெரிபட்டு குறித்த பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியம் பற்றியும் சட்டத்தின் ஆட்சி இடம்பெறுகின்ற பொழுதுதான் மக்கள் நாட்டில் சமாதானமாகவும் சகஜமான வாழ்க்கையினையும் வாழமுடியும் என்பது தொடர்பாக நீண்ட சமர்ப்பணம் ஒன்றினை ஆற்றி இருந்தார்.
இதன் பொழுது குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ள பிரதேசமானது தொல்பொருளியல் திணைக்களத்திற்கு உரிய பிரதேசம் எனக்கூறப்படுவதினால் குறித்த திணைக்களத்தின் அனுமதியின்றியும் புத்தர்சிலை அமைப்பதற்கான எந்தவித சட்டநடவடிக்கையும் பின்பற்றப்படாமையாலும் குறித்த சிலை அமைக்கப்படுவதனால் சட்டவிரோத செயற்பாட்டின் மூலம் பிரதேசத்தில் அமைதிகுழைவதற்கு இடமளிக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.
சமர்ப்பணத்தினை கவனத்தில் எடுத்த அம்பாறை மாவட்ட நீதவான் அவர்கள் உடனடியாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை 30.11.2016ம் திகதி அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பணம் ஆகும்படி கட்டளைபிறப்பித்தார்.
எஸ்.எம்.சன்சீர்