எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை போக்குவரத்து டிப்போவிற்கு சொந்தமான பஸ் கொழும்பு நோக்கி நேற்று (06) இரவு 9.30 இற்கு புறப்பட்டபோது மட்டக்களப்பு கல்லடிக்கு அண்மித்த பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் கல்லெறிந்து தாக்குதல் நடாத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் பஸ் சாரதி எவ்வித காயங்களுமின்றி தப்பித்ததுடன் பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சவம் தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை 2 மணித்தியாலங்கள் தாமதித்தே கொழும்பு நோக்கி பிரிதொரு பஸ் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பெரும் அசௌகரியங்களையும் அவர்கள் எதிர்கொண்டனர்.