'சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கை' - சம்மாந்துறை DCC


யு.எல்.எம். றியாஸ்-
'சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்படட பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக காணி உத்தரவுப்பாத்திரம் இல்லாத குடும்பங்களுக்கும் காணி உத்தரவுப் பாத்திரங்களை மிக விரைவாக பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தவிசாளருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்ப்போர்கூ டத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ் விடயங்கள் தொடர்பாக துறை சாந்தவர்களிடம் கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட்துடன் துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்படடவர்களுக்கு பணிப்புரைகள்வ ழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்ட்ங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட்துடன் துரிதமாக முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்படட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்ட்து.

இக் கூடடத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ரி .கலையரசன் , பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் திணைக்களத்தி தலைவர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -