தற்காலத்தில் நாடு பூராகவும் பெய்து வரும் மழை காரணமாக எமது பிரதேசங்களில் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகளை தாமதமின்றி அரச வைத்தியசாலைக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி U.L.நஸ்ரூத்தீன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்..
அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுமக்கள் தங்களது வீட்டு கூறைகளில் இலைகள் , குப்பைகள் ,மழை நீர் தேங்கி நிக்காத வண்ணம் சுத்தமாக வைத்திருப்பதுடன் மழை நீர் தேங்கி நிக்கக்கூடிய பாத்திரங்கள், சிரட்டைகள், இளநீர் கோம்பைகள், பொலிதீன்கள்,டயர்கள் என்பவற்றை உடனடியாக அகற்றுவதுடன் தங்களது வீடு மற்றும் சுற்று சூழல்களை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்..