”GSP+ முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்”

ம காலத்தில் இலங்கைத் திருநாட்டில் அனைத்து மக்களிடையே பூதாகரமான ஒரு பிரச்சினையாக ஜிஎஸ்பி பிளஸ் என்ற ஐரோப்பிய வரிச்சலுகை காணப்படுகின்றது.  கடந்த அரசாங்கத்தில் யுத்த வேளையில் நடைபெற்றதாக கூறப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் காரணமாக அன்று வழங்கப்பட்டிருந்த ஜிஎஸ்பி பிளஸ் விரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் மஹிந்த அரசால் இழந்த வரிச்சலுகையினை மீள பெற வேண்டி மேற் கொண்ட பயணத்தில் வெற்றி கண்டு மீண்டும் அதனை இலங்கைக்கு கொண்டு வர தயாராகின்றனர். 

இந்த செயற்பாடுகள் மூலம் முந்திய அரசாங்கம் விட்டதை நாம் பெற்றுத்தந்துள்ளோம் என்ற அரசியல் தந்திரோபாயம் காணப்படும் இந்த வரிச்சலுகையில், முன்னர் போன்றில்லாது சில நிபந்தனைகள் இட்டு ஒப்பந்தம் கைத்தாச்சிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் திருமண வயதாக காணப்புகின்ற 14 வயது என்பதை 16 ஆக அதிகரிக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளுள் ஒன்றாகும். 

இந்த தருணத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது. அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் பிரச்சினை பூதாகரமாக வெடித்து ஓய்வுற்ற வேளையில், இந்தியாவில் அதன் பிரதமர் மோடியால் இந்தியச் சட்டத்தில் காணப்படும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாகரத்து முறைகள் (தலாக்) பெண்களுக்கு எதிரான ஒன்று என்றும் பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர் என்ற கோஷமிட்டு இன்று இந்திாவில் மூலை முடுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதோடு தொலைக்காட்சிகளின் இவ்வார தலைப்புச் செய்தியாக கூட மாறியுள்ளது. 

அதே போன்று இலங்கையில் பெண்களின் பர்தா விடையத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் இனவாதிகளின் பேசு பொருளாக மாறப்பட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுத்தப்பட்ட பத்வாவை இன்று உயிர்ப்பித்து முகம் மூடுவது வாஜிப் என பத்வா வளங்கியிருக்கின்றது. அதே போன்று மற்றுமொரு அமைப்பும் ஏட்டிற்குப் போட்டியாக முகம் மூடுவது ஹறாம் என பத்வா வழங்கயிருக்கின்றது. இந் பிரச்சினையும் சற்று ஓய்கின்ற நிலையில் 

இந்தியாவில் ஏற்பட்டுள்ள தனியார் சட்ட மாற்றம் போன்று இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்திலும் திருமண வயது தொடர்பான பிரச்சினை கிளப்பட்டுகின்றது என்றால் இதற்குப் பின்னால் ஒரு குழு உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ண வெளிக்கிளம்பியுள்ள செயலாக இது காணப்படுகின்றது. ஏதோ ஒரு அமைப்பு இவ்விடையங்களை நடைமுறைப்படுத்த வெளிக்கிளம்பியுள்ளதோ? என்ற சந்தேகம் உருவாகின்றது. ஏனனில் நடைபெறுகின்ற சம்பவங்கள் அனைத்தும் ஏலவே திட்டமிட்டு படிப்படியாக நடைபெறுகின்ற ஒன்றாக உள்ளது.

மேலும் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஜிஎஸ்பி பிளஸ் இனை எதிர்க்கின்றார்கள் அதன் காரணமாகத்தான் அது தடுக்கப்படுகின்றது என்ற எண்ணமும் கருத்துக்களும் பேரிண மக்களிடையே விதைக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு 14 வயதில் திருமணமாகி அதனால் பட்ட துன்பங்களை காரணம் காட்டி திருமண வயது தொடர்பான முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயதை கூட்டக்கூறி வைக்கப்பட்ட கோரிக்கை இங்கு ஞாபகப்படுத்தபட வேண்டும். மார்க்க அறிவில்லாத பல பெண்கள் இன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற கோரி கோரிக்கை விடுகின்ற நிலை தற்போது காணப்படுகின்றது.

குறிப்பாக காழி நீதிபதிகளாக பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாக கூற முடிவதில்லை, அதே போன்று விவாகப்பதிவாளர்களாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சில பெண்கள் நியாயம் வேண்டும் என பேசுகின்றனர். ஆனால் இன்றைய காழி நீதிமன்றங்களில் பார்த்தால் தெரியும் ஆண்களை விட பெண்கள் தான் தங்கள் பக்க நியாயங்களை வெட்கமின்றி வெளிப்படையாக பேசுகின்றனர். இந்த நடைமுறை நபியவர்கள் காலத்தில் இருந்தே இருக்கின்றது. ஒரு தடவை ஒரு பெண் நபியவர்களிடம் வந்து தனது சேலையின் முடிவில் முடிச்சுப் போட்டு காட்டி என் கணவரது ஆண்குறி இப்படித்தான் இருக்கிறது எனக்கு விவாகரத்து வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுள்ளார். அதே போன்று நிலை தொடர்ந்து தான் இருக்கின்றது.

விவாகப் பதிவாளராக பெண்கள் நியமிக்கப்படுகின்ற போது மாததீட்டின் போது பள்ளிவாயலில் அதிகமாக நடைபெறுகின்ற திருமணங்களின் போது மாப்பிள்ளையை வீட்டிற்கு வரச் சொல்லியா பதிவு மேற்கொள்வார்? இப்படி பல விடையங்கள் இருப்பதால் தான் இஸ்லாம் அது தொடர்பில் பூரண விளக்கம் வளஙகப்பட்டிருக்கின்றது. ஆனால் மார்க்க அறிவு சற்றும் இல்லாத இது போன்ற பெண்களால் இன்று அது மிகப் பெரிய கொடுமைகளாக பார்க்கப்படுகின்றது.

மேற்படியான பெண்கள் கூட இந்த கொள்கை கொண்ட அமைப்புக்களால் வழிநடாத்தப்படுகின்றார்களோ என்ற எண்ணமும் எமக்கு தோன்றாமலில்லை. அடுத்து முஸ்லிம் தனியார் சட்டத்தை பொறுத்தவரையில் திருத்தப்பட வேண்டிய பல விடையங்கள் காணப்படுவது என்பது உண்மைதான் . ஆனால் அதில் திருத்தம் மேற்கொள்பவர்கள் அது தொடர்பில் பூரண அறிவிருப்பது அவசியமாகும். 

முந்திய காலங்களில் முஸ்லிம் மௌலவிமார்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டிய தேவை உணரப்பட்ட போது பௌத்த நாட்டில் இது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அன்றையை முஸ்லிம் அமைச்சர்கள் அனைத்து மத தலைவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்குவோம் என பாராளுமன்னறத்தில் அறிக்கை சமர்ப்பித்து மிகக் கச்சிதமாக காய் நகர்த்தி மௌலவிமார்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளனர். இந்த காய்நகர்த்தல் தான் நமக்கு இழப்பில்லாத வெற்றிகளை பெற்றுத் தரும். 

அதே போன்று இந்த ஜிஎஸ்பி பிளஸ் விடயத்திலும் நாம் அமைதி காத்து இருக்கின்ற போது முஸ்லிம் அல்லாத மக்களால் இதற்கு பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக ஜிஎஸ்பி பிளஸ் நிபந்தனைகளில் தனியார் சட்ட வயது மட்டும் நிபந்தனையல்ல. யுத்தத்தின் பின்னரான புணர்வாழ்வு, காணிகள் விடுவிப்பு, வடக்கு மக்களுக்கான தீர்வுகள், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல், போன்ற பல அம்சங்கள் இடப்பட்டுள்ளன. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விடையங்களை செய்கின்ற போது ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற நிலையும், பௌத்த மக்களின் வாக்குகளையும் இழக்கின்ற நிலமை வரும். நடைமுறைப்படுத்தாது விடுகின்ற போது தமிழ் மக்களது அழுத்தத்தையும் சந்திக்க வேண்டிய நிலமை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள சவால்களாகும். இதற்கிடையில் சம்பந்தமே இல்லாமல் நாம் விளக்கில் விழுந்த பூச்சிகளாக மாறியுள்ளதோடு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தடுக்கப்படுகின்ற போது அதற்கான சூத்திரதாரிகள் நாம் தான் என நாம் எதிர்க்கப்படும் நிலை இன்று உருவாகியுள்ளன. இதற்கான சான்றுகளாகவே சம காலமாக இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட முன்னெடுப்புக்களை குறிப்பிட்டுக்காட்டலாம்.

இதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சரியானதா?

ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரையில் இலங்கை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் நடத்தும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அதனை நடாத்துவதற்கு அனுமதிக்கவோ, தடுக்கவோ அரசாங்கத்திற்கும் முடியும். ஆனால் இந்த ஆர்ப்பாட்ங்கள் மூலம் முஸ்லிம்களாகிய நாம் வீதிக்கு இறங்குகின்ற போது நமக்கு கிடைக்க இருக்கின்ற பல சாதகங்களை நாமே இழக்கின்ற ஒரு நிலை உருவாகும். இது நாமே நமது சமூகத்திற்கு எதிராக வெளிக் கிளம்பும் நிலையை உருவாக்கும். 

உதாரணமாக குறிப்பிடுகின்ற போது முஸ்லிம் தனியார் சட்டத்தினைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு சாதகமான பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது. எந்தளவுக்கெனின் மற்ற மதத்தவர்கள் பொறாமை படுமளவுக்கு அதிகமாக சலுகைகள் எமக்கு காணப்படுன்றன.  அரசாங்க தொழில் புரியும் முஸ்லிம் பெண்கள் இத்தாவாக 4 மாதம் 10 நாள் வீட்டில் இருக்கலாம்.

நோன்பு காலங்களில் பாடசாலை விடுமுறைகள்

குழந்தை பேறு விடுமுறைகள்.

இவ்வாறான விடையங்கள் பெரும்பாலும் பேரிண மக்கள் பலருக்கு தெரியாமல் இருக்கின்றது. இத்தாவினை பொறுத்தவரை சாதாரணமாக 40 நாட்கள் தான் பெண்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் பௌத்த மக்கள் இடையே காணப்படுகின்றது. நாங்கள் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிக்கிளம்பி இப்படியான சட்டங்களை ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தி எம்மை நாமே காட்டிக் கொடுக்கின்ற நிலையினை உருவாக்க கூடாது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பான ஆர்ப்பாட்டம் எந்த அளவு அதிர்வினை ஏற்படுத்தியிருக்கினறது என்பதை கடந்த கால நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

இதற்கு தீர்வு என்ன?

ஜிஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை பொறுத்த மட்டில் எம்மை விட மற்ற மக்களுக்கே அதிகம் பாதிப்பு காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் வயதை கூட்டக் கூறி கோரிக்கை விடுப்பதால் பிரச்சினை தீராது. குறிப்பிட்ட 14 வயதில் அப் பெண் திருமணம் செய்யப்பட்டது பிழை என்பதற்காக சட்டமாக மாற்றப் போனால் 14 வயதில் திருமணம் செய்து தர கோருகின்ற பெண் பிள்ளைகளுக்கு என்ன தீர்வு கொடுப்பது? கணவனை இழந்த பெண்களுக்கு 14 வயதில் பெண் பிள்கைள் இருப்பின் அப் பிள்ளைகள் உடலாலும் மனதாலும் திருமணம் செய்ய தகுதி இருக்கின்ற போது 14 வயதை கூட்ட வேண்டும் என்றால் இவர்களுக்கு என்ன தீர்வு கொடுப்பது? மனைவியை இழந்த கணவனுக்கு 14 வயதில் பெண் பிள்ளைகள் இருக்கின்ற போது அவர் அடுத்த திருமணம் செய்ய நாடுகின்ற போது இப் பிள்ளை திருமணத்திற்கு தயாரானால் என்ன தீர்வு கொடுப்பது?

எனவே இந்த வகையான பல சிக்கல்கள் இருப்பதால் நாம் ஒரு வேலை செய்கின்ற போது அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கின்ற செயலாக மாறும். அதாவது பெண்கள் வயதை அவர்கள் கூறுகின்ற போலவே 16 ஆக உயர்த்தி ஒரு குறிப்பாக மேலதிகமாக ஒரு செய்தியை சேர்கலாம். அதாவது 14 வயதிலோ அல்லது அதற்கு குறைவாக திருமணம் செய்ய வேண்டிய தேவை யாருக்காது ஏற்படுகின்ற போது தங்களது பகுதி காழி நீதவானிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு நடைபெற வேண்டும் என்ற சர்தை மேலதிகமாக சேர்க்கின்ற போது இப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றது மட்டுமன்றி இந்த சூழ்ச்சிகளில் இருந்து நமது சமூகத்தையும் பாதுகாக்கலாம். அது மட்டுமல்லாது எம் மீது பூசப்பட்ட சேறுகளுக்கு ஓர் தீர்வாக இது அமையும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். 

இனவே இது தொர்பில் அதிகாரம் உள்ள தரப்பினர்கள் முன்வந்து இது தொடர்பில் ஏதுவான முடிவுகளைப் பெற்றெடுக்க முன்வர வேண்டும். இலகுவாக வேண்றெடுக்க வேண்டிய விடையங்களில் தீவிர போக்கை காட்டி அரசனுக்காக புருஷனை இழந்த நிலையாக நம்மை நாமே ஆக்கிகொள்ளமல் இருக்க உறுதி பூண வேண்டும். அதற்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் மன உறுதியை தருவானாக! 

முஹம்மது வஸீம் ஹுஸைன்
மருதமுனை
மாணவன்–இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
ரியாத்,
ஸஊதி அரேபியா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -