இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி தங்களது பங்களிப்பை தர எதிர்பார்த்துள்ளதாக ஜேர்மனின் துணை அதிபர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை சரியான பாதையில் தங்களது முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது, அதற்கு ஜேர்மன் தங்களது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் கல்வித்துறை முன்னேற்றங்கள் மற்றும் நவீன அபிவிருந்தி தொடர்பாகவும் ஜேர்மனின் துணை அதிபரிடம் தெரிவித்துள்ளார்.