பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ள அதிக சொகுசு வாகனத்தினால் அரசாங்கத்துக்கு மூன்று கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் மர்சிடீஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ்.350 ரக மோட்டார் கார் ஒன்றை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். அமெரிக்காவிலிருந்து இந்தக் காரை அவர் வரவழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 02 ஆம் திகதி இந்தக் காரை அவர் இலங்கைக்கு வரவழைத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தில் சாதாரண மக்கள் வாங்கும் மோட்டார் வாகனத்தின் விலையை 2 லட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், நல்லாட்சி அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரூபாய்களை நட்டம் ஏற்படுத்தும் விதத்தில் வாகனம் வரவழைப்பது விசனத்துக்குரிய ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.