அரசியலில் ஓரங்கட்டப்படுவேனா..? என அஞ்சும் யோகேஸ்வரன் MP

முசலியூர்.கே.சி.எம்அஸ்ஹர்-
ட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் தன்னைப் பெரும் தமிழ்ப்பற்றாளராகவும், இனத்திற்காகப் போராடும் போராளியாகவும் இனம்காட்டிக்கொள்ள 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்ற பாரதியின் பாடலிற்கு ஒப்ப செயற்படுவதைக்காண முடிகிறது. இவரின் செயற்பாட்டில் முஸ்லிம்களை அதிகம் சீண்டுவதை அதிகம் காணமுடிகிறது.

புpரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி இராஜாங்க அமைச்சர்,எம். எல்.எ.எம் ஹிஸ்புல்லா போன்றோர் கிழக்கில் பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கும்போது, அதைத் தடுப்பவராகவும்,அதிகம் முட்டுக்கட்டை போடுபவராகவும் இவரே திகழ்கிறார்.தமிழ்ப்பிரதேசங்களில் இவ்வமைச்சர்கள் ஏதாவது, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டால் அதற்கெதிராக மக்களைத்தூண்டும் செயற்பாடுகளிலும் இவர் அதிகம் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.

முஸ்லிம்களையும்,முஸ்லிம் அமைச்சர்களையும் விமர்சிப்பதுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தையும் தடுத்தால,; தன்னை தம்மின மக்கள் அதிகம் நேசிப்பர் என எண்ணுவதுடன் ஆண்டாண்டுகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் எனக் கனவு காண்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் நியமிக்கப்பட உள்ளார் என்று எவ்வித அடிப்படையுமற்ற வதந்திகளையும் பரப்பி வருகிறார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் யார் ? அவரின் அமைச்சு முழு இலங்கை மீதும் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. அவர் சிங்கள,முஸ்லிம். தமிழ் அனைவருக்குமான அமைச்சர் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள் முந்நாள் அரசிலும், இந்நாள் அரசிலும் அதிகம் மதிப்பும் கௌரவமுமிக்க ஒருவர்.கடந்த அமைச்சில் அமைச்சர் பெற்றிருந்த அமைச்சு மீண்டும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றால் அமைச்சரின் நேர்மை,திறமை ,நம்பிக்கை என்பவற்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

அமைச்சர் விரும்பினால் அபிவிருத்தியை வடமாகாணத்திற்கு அல்லது வன்னிக்கு அல்லது மன்னாருக்கு கேட்பார் . அது அவரின் விருப்பமும்,சாணக்கியமும் ஆகும்.அமைச்சரின் கிராமத்திலுள்ள குளத்தைப் புனரமைக்க வரவு செலவுதிட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்முலம் பிரதேசத்தின் நீர்த்தேவைகள் புர்த்தி செய்யப்படும்.இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது வீண்விரயம் என்று யோகேஸ் எம்.பி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.இது இவருக்குத்தேவையற்ற விடயம்.இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவருக்கு நம்பி வாக்களித்த மக்களின் தேவைகள் தேங்கிக்கிடக்க அதைப்பற்றிப்பேசாமல் ஆப்பிழுத்து அகப்பட்டுக் கொண்டார்.இவருக்கு வாய்கிழிய வன்னிக்கதை தேவையா ?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்தலைவர் சம்பந்தன் ஐயா,மாவை சேனாதிராஜா ஐயா,சுமந்திரன் ஐயா போன்றோர்கள் எவ்வளவு கௌரவமாக நடந்துகொள்கிறார்கள்.தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக அதிகம் பாடுபடுகிறார்கள். வடபுலமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை ஒரு துரதிஸ்ட இனசுத்திகரிப்பு என கவலையைத் தெரிவிக்கின்றனர்.மாறாக அதேகட்சியைச்சேர்ந்த கிழக்கின் முந்நாள்,இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்1990 இல் வடபுலமுஸ்லிம்கள் பாதுகாப்புக்காக ,பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அறிக்கை விடுகின்றனர்.இது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது. இவர்கட்கு உரிய பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா,பிரதியமைச்சர் அமீரலி போன்றோரின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தன்னை அரசியலில் இருந்து ஓரம்கட்டிவிடும் என்ற பயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.இதனாலேயே இவர் தடுமாறுகிறார்.இவர் போன்றோரின் தீவிரப்பேச்சுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த விலை அதிகம்.சொத்திழப்பு,தொழில் இழப்பு,உயிரிழப்பு என அடுக்கிக்கொண்டு போகலாம்.இவருக்கு சிரேஷ்ட த.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிகாட்ட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -