வியாழேந்திரன் MPக்கு எதிராக மட்டக்களப்பு விஹாரதிபதி முறைப்பாடு

மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி, தமக்கெதிராக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் குறித்த தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

”மட்டக்களப்பு – பதுளை வீதியில் உள்ள தனியார் காணிக்குள் எவரும் உள்நுழைய முடியாதென ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வேளையில் அதற்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டு சட்டத்தை அவமதித்த தேரரை கைது செய்யாமல் வெறுமனே கைகட்டி பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், இப்பொழுது குறித்த தேரர் செய்துள்ள முறைப்பாட்டை விசாரிப்பதற்காக என்னை பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் தற்போதைய நல்லாட்சியிலும் சட்டம் சீர்குலைந்திருப்பதாகத்தான் இந்த விடயத்தைப் பார்க்கின்றேன். நாட்டை குழப்பி சிறுபான்மை மக்களின் வாழ்வைச் சீரழிக்க மதவாதிகளும், இனவாதிகளும் திட்டமிட்டுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து மதவாதிகளும் இனவாதிகளும்தான் இந்த நாட்டைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமில்லாமல் அமுலாக்கப்பட்டிருந்தால் இத்தனை குழப்பங்களையும் அழிவுகளையும் இந்த நாடு சந்தித்திருக்காது.

தூஷண வார்த்தைகளை அருவறுப்பின்றி அள்ளியிறைப்பவர்களை இலங்கையில் பட்டியலிட்டால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்தான் முதலிடத்தைத் தட்டிக்கொள்வார். நாட்டின் பெண் அதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அனைவரையும் அவர் தூஷணத்தால் திட்டித் தீர்த்திருக்கிறார். இப்பொழுது ஞானசாரர் தலைமையிலே ராவண பலயவைக் கொண்டு வந்து எதிர்வரும் 3ஆம் திகதி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகின்றாராம். இவர்கள்தான் நாட்டில் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள். நாம் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிப்பவர்கள். எனவே, சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக பொலிஸ் அதிகாரிகளும் நல்லாட்சி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆதவன்  

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -