’இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் அன்மையில் வைக்கப்பட்ட சிலைக்கும் அதன் அனுமதிக்கும் அது தொடர்பாக வெளியான செய்திக்கும் எனக்கும் தொடர்பே இல்லை’ என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் தெரிவித்தார்.
இணையத்தளங்களில் இன்று (05) செய்தியொன்று பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு ஆதரவாக செயற்படுவது போல் வெளியானது இது தொடர்பில் எமது இம்போட் மிரர் இணையத்தளத்தின் செய்திப்பிரிவினை தொடர்புகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
குறித்த சிலை வைப்பிற்கு நான் அனுமதி வழங்கியதாக சிலர் வாங்குரோத்து தன அரசியல் நிலையில் அரசியல் செய்யவருபவர்களும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்களினாலும் இவ்வாறான செய்திகள் மக்கள் மத்தியில் பிழையாக பரப்படுகின்றது.
ஆனால் ”குறித்த சிலை வைப்பதற்கு நான் ஒரு போதும் அனுமது வழங்கப்போவதுமில்லை அதற்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியமும் இல்லை” குறித்த சிலை சட்டத்தை மீறி வைகப்பட்டது என்பதையும் நான் என கடந்த 03ஆம் திகதி இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் நான் தெரிவித்திருந்தேன்.
அவ்வாறு நான் கூட்டம் ஒன்றில் அனுமதி வழங்கியதாக சொன்னதாக ஆவணங்கள் குறிப்பாக ஒளி,ஒலிப்பதிவுகள் கட்டாயம் இருக்கும் அவ்வாறு நான் சொன்னது உண்மை என்றால் அதனை வெளியிடவும். நான் கூறியதை பிழையாக விளங்கி ஊடகங்களில் பிழையாக அறிக்கைகளை விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மக்களால் நிராகரிகப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் அரசியலை தக்க வைப்பதற்காக இவ்வாறான அப்பட்டமான பொய்களை மக்கள் நன்றாக விளங்கியுள்ளார்கள். மேலும், குறித்த சிலையை அப்புறப்படுத்துவதற்காக முன்னின்று செயற்படவும் சித்தமாக உள்ளேன் . எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.