பொது பலசேனா அமைப்பிற்கு அடைக்களம் கொடுக்கின்ற தளமாக நல்லாட்சி - அன்வர் MPC கண்டனம்

சிறுபாண்மையினர் பல எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்சவின் அரசை கவிழ்த்து நாட்டிலே தமது கலாச்சாரம் மத கொள்கைகளை நாட்டில் சம உரிமையாக வாழவேண்டும் என்ற பெரிய கனவுகளோடு வாக்களித்து கொண்டுவந்த நல்லாட்சி சிறுபான்மையினருக்கு கடந்த மஹிந்த ராஜபக்சவின் யுகத்தில் நடந்த அதே தொடர் அவலம் இன்னும் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டும் விஸ்வரூபம் கொண்டு ஆடுவது கடந்த அரசுக்கும் இந்த நல்லாட்சி என்று பெயரளவில் சொல்கின்ற அரசுக்கும் என்ன வித்தியாசம் நாம் பெருமை படுவதற்கு ஒன்றுமில்லை.

இன்று அதிகமாக முஸ்லீம்களின் கலாச்சாரம்,மத ரீதியான நிந்தனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதை கண்டும் காணாதது போல் அரசு இருப்பது இந்த நாட்டிலுள்ள முஸ்லிகளை அரசு கேவலப்படுத்துகிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை.

அண்மைக்காலமாக பொதுபல சேனா சட்டத்தை கையில் எடுப்பதை நாட்டில் நீதித்துறை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஜனாசார தேரர் பகிரங்கமாக முஸ்லீம் தனியார் சட்ட மாற்றம் தொடர்பாக தனது பத்திரிகை மாநாட்டில் முஸ்லிம்கள் அனைவரும் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டும் எனவும் தௌஹீத் ஜமாத்தினர் ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டிலுள்ள சிங்கள வாலிபர்களைக் கொண்டு விரட்டி அடிப்போம் என்று கூறி இருப்பது 

முஸ்லிம்களின் புனித வணக்கஸ்தலமான பலஸ்தீனினுள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பில் குறித்த பள்ளிவாசல் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற கருத்துக்கு இலங்கையின் மறைமுகமான ஆதரவு 

இறக்காமம் மாணிக்கமடு பௌத்தர்கள் அற்ற பிரதேசத்தில் திடீர் என வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் 

அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலித் என்பவரின் வீடு அரிசிமலை பௌத்த பிக்குவின் ஏற்பாட்டில் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராவணபலய சிங்கலே போன்ற பௌத்த பிக்குகள் அடங்கிய காடையர்கள் கூட்டம் வீட்டை தாக்கியது 

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி கொலை செய்யப்பட்டமை 

முஸ்லீம் பெண்களின் முகத்திரை அடங்கிய ஆடை தொடர்பில் இனவாத கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படையாக தெரிவித்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஊடாகவும் செயல்படுவது நாலாட்சியின்மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கின்ற தருணமாக மாறிவருகின்றது.

நல்லாட்சி அரசும் சட்டம் ஒழுங்கு என்ற விடயத்தை சிறுபான்மையினர்மீது மட்டும் அமுல்படுத்துவது பெரும்பான்மை பௌத்த பிக்குகளுக்கு சட்டத்தை உத்தியோகமற்ற போலீசாக செயல் பட கொடுத்திருப்பது இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக சிறு பான்மையினருக்கு விடிவில்லை என்பதை வெளிப்படையாக புடம்போட்டுக் காட்டுகிறது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும் அடைக்களம் கொடுக்கின்ற தளமாக நல்லாட்சி அரசு தோற்றமளிக்கிறது.

எனவே நல்லாட்சி அரசு முஸ்லிம்கள் விடயத்தில் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனை அளிக்கின்றது ஆனால் ஒரு நாள் இறைவனின் தீர்ப்பு உண்டு அது இறுதியானதாக இருக்கும் அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -