கடந்த பல வருடங்களாக புல்மோட்டையில் அமைய பெற்றுள்ள கணியமணல் கூட்டுஸ்தாபனத்தினால் புல்மோட்டை தொடக்கம் கொக்கிளாய் வரையான கடற்கரையில் சட்ட விரோதமாக குறித்த கூட்டுத்தாபனத்தினால் கனிய மணல் அகழ்வு இடம்பெறுகின்றது குறித்த நடவடிக்கை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணைகளாக கொண்டு செல்லப்பட்டு புடவைக்கட்டுப் பிரதேசத்தில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த பகுதியிலுள்ள பிரதேச மீனவர்களின் கரைவலை பாட்டுப் பகுதியில்,மற்றும் மீனவர்களின் வாடிகளை அண்டிய பகுதிகளில் பெரிய குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் கடந்த ஐம்பது வருடங்களாக மண் அகழ்வு இடம்பெற்று வருவதுடன் கடற்பகுதி கரையை சுமார் 500 மீட்டர் வரையான பகுதி நிலத்தை நோக்கி கடல் வருகை தந்ததுடன் பிரதேசத்தில் மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட்டால் பாரிய அழிவினை புல்மோட்டை மற்றும் கொக்கிளாய் புடவைக்கட்டு மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் அஞ்சுகின்றனர்
இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களிடத்தில் முறையிட்டதை அடுத்து ஜனதிபதி,பாதுகாப்பு அமைச்சு, புவிசரிதவியல் திணைக்களம்,மத்திய சுற்றாடல் திணைக்களம்,கரையோர பாதுகாப்பு திணைக்களம்,அரசாங்க அதிபர் திருகோணமலை,பிரதேச செயலாளர் குச்சவெளி,மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலையம் போன்றவற்றிக்கு தொலை நகல் மற்றும் தபால் மூலமாகவும் தெரிவிக்க பட்டுள்ளதாகவும் இது விடயமாக எதிர்வரும் மாகாண சபை அமர்வு,பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் எடுக்கப்படும் எனவும் கூறினார்
குறித்த பகுதியான மீனவர்கள் செறிந்து வாழும் பகுதியான அரிசிமலை மீனவர்களின் பகுதிக்குள் அத்துமீறி 15.11.2016 காலை முற்பட்டபோது பிரதேச மீனவர்கள் எதிர்ப்புகளை காட்டியதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் பெரிய பள்ளிவாசலின் தலைவர் கலீல் லெப்பை ஆகியோர் பிரதேச மீனவர்களின் வேண்டுகோளுக்கமைவாக புல்மோட்டை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பாக முறையிட்டபோது குறித்த கூட்டுஸ்தாபனத்தின் அகழ்வு பொறியலாளர் ராஜகுரு அவர்களை நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ம் திகதி வரை தமக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
எனக்கூறியவுடன் முறையான மண் அகழ்வு இடம்பெறவில்லை மண் அகழ்ந்து எடுக்கப்படும் இடங்களில் காணப்படும் பெரிய குழிகள் மூடப்படாத மற்றும் காடுகள் அழிக்கப்பட்ட நிலையில் பிரதேசமெங்கும் காட்சி அளிப்பதுடன் புல்மோட்டை பிரதேசத்தை எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கடிக்க செய்கின்ற நிலைப்பாட்டையே கூட்டுத்தாபனம் செய்து வருகின்றது எனவும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அகழ்வு இடம்பெற வேண்டும் என்பதற்கு பதிலாக முறையற்ற விதத்தில் இடம்பெறும் செயல்பாட்டை வீடியோ வடிவில் தாம் படம் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறிய மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்தும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
பின்னர் திருகோணமலை அரசாங்க அதிபரை சந்தித்த மாகாண சபை உறுப்பினர் அன்வர் உறுப்பினர் பேசியதுடன் கணியமனல் கூட்டுஸ்தாபன தகுதிவாய்ந்த அதிகாரி அசோக பீரிஸ் உடன் தொலைபேசியில் பேசியதை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புல்மோட்டை பகுதிக்கு அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் பிரச்சசினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு அரசாங்க அதிபரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.