ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் தோல்வியுற்ற அமைச்சர் தயாகமகே கடந்த பாராளுமன்ற தேர்தலிலே அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களினுடைய வாக்குகளை பெற்று அதிகாரத்தினை பெற்றதற்கு பிற்பாடு இன்று இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது சம்பந்தமாக தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கின்ற பொழுது அவருக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு செய்துள்ள மிக பெரிய துரோகமாகும். அது மட்டுமல்லாமல் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தினை விடவும் அதிகமான தொனியிலே சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற விடயமாகவும், சர்வதேசம் பார்க்கும் அளவிற்கு குரோதத்தன்மை வாய்ந்தாகவும் இருக்கின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புல்மோட்டை அன்வர் தனது எதிர்ப்பினை அமைச்சர் தயாகமகேக்கு எதிராக அவரிடம் தொடுக்கப்பட்ட நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த புல்மோட்டை அனவர்….
அண்மையில் இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைகப்பட்ட விடயமானது என்னை பொறுத்த மட்டில் முறையற்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கபடுகின்றது. கடந்த மஹிந்தராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்து காணப்பட்டதினால் நல்லாட்சியினை விரும்பிய மக்கள் நல்லாட்சியினூடாக சிறுபான்மை மக்களின் மத அடிப்படையிலான கலாச்சாரங்கள் சமூகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே வாக்களித்து இந்த நல்லாட்சியினை உருவாக்கியிருந்தார்கள். இன்று இந்த நல்லாட்சியிலும் அவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதினை பார்க்கின்ற நிகழ்வுகள்தான் இவ்வாறு நான் கூற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது சம்பந்தமாக நான் பல தடவைகள் அறிக்கைகள் விட்டும் இருக்கின்றேன்.
குறிப்பாக இந்த விடயமானது எல்லோருக்கும் வேதனை அளிக்க கூடிய விடயமாக இருக்கின்றது. இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதியாக இருந்தாலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேசமாக இருக்கின்றது. ஆகவே பெளத்தர்கள் மிகவும் குறைவாக வாழுகின்ற அப்பிரதேசத்திலே பிரதேசத்திலே இரவோடிரவாக புத்தர் சிலையினை கொண்டு வைத்திருப்பதென்பது இன்று நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற நல்லாட்சியிலே பொறுத்தமற்ற செயற்பாடாகவே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கும் இந்த நல்லாட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. கந்த ஆட்சியிலே இடம் பெற்ற சம்பவங்கள் இந்த ஆட்சியிலும் தொடராகவும் இடம் பெற்றுக்கொண்டிருபதனையே எங்களாலும் சர்வதேச சமூகத்தினாலும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது என்பதற்கு இவ்வாறான விடயங்கள் அடையாளமாக காணப்படுகின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட பிரதேச செயலகத்திலே 07.11.2016 அன்று இடம் பெற்ற அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டத்திலே அமைச்சர் தயாகமகே கூறிய விடயத்தினை பார்க்கின்ற பொழுது இதற்கு பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாகவே தெளிவாகின்றது. நல்லாட்சியினை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியவரும், கடந்த அரசாங்கத்திலே கிழக்கு மாகாண சபையிலே எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற பொழுது சிறுபான்மையினருக்கு எதிராக மஹிந்த அரசாங்கத்தினை பழிதீட்டி, திட்டி தூற்றியதும் அல்லாமல் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்டுகின்றது என்றெல்லாம் வாய்கிழிய குரல் கொடுத்த அமைச்சர் தயாகமகே தங்களுக்கு அதிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு பிற்பாடு இன்று மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினை விடவும் அதிகமான தொனியிலே சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற அவருடைய வசனங்களை பார்க்கின்ற பொழுது மிகவும் மனவேதனையும் நாங்கள் மறு புறத்திலே இந்த நல்லாட்சி மீது நாங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை கேள்வி குறியாகி விடுமோ என என்ன தோன்றுகின்றது.
அது மட்டுமல்லாமல் தயாகமகே உரையாற்றுகின்ற பொழுது இலங்கையின் புராதன வரலாற்றை பார்த்தால் தீகவாபி விகாரை கல்வெட்டில் தீகவாபி விகாரைக்கு சொந்தமாக அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 12000 ஹேக்கர் காணி இருந்துள்ளது. அதாவது பொத்துவில் கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் கூட தீகவாபி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது எனவும் அவ்வாறு அந்த காணிகளை நாங்கள் பெற எத்தனித்தால் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை காணிகளை எடுக்க நேரிடும் என தெரிவித்த கருத்தும் பாகிஸ்தானில் நிலத்தை தோண்டினாலும் புத்த சிலையே வெளிப்படும். அங்கு புத்தரின் சிலைகளை முஸ்லிம்கள் பாதுகாக்கிறார்கள். ஆகவே அதுவும் ஒரு பெளத்த பூமி என கூறியுள்ள கருத்துக்களும் அவருடைய இனக்குறோத தன்மையினை வெளிப்படுத்துவதோடு அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம்களினுடைய வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்ததற்கு பிற்பாடு முஸ்லிம்களுக்கு இளைக்கின்ற மிகப்பெரிய துரோகமாகவே பார்க்க வேண்டியதாக உள்ளது தெரிவித்தார்.
தொடர்ந்து அன்வரிம் கேற்கப்பட்ட கேள்வியான உங்களினுடைய கட்சியினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்துக்களானது பலராலும் விமர்சிக்கப்படுகின்றதே என்ற கேள்விக்கு அன்வர் அவர் அளித்த பதிலானது..
எங்களுடைய கட்சியினை சேர்ந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சிலை வைப்பதற்கு விரும்புவாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. அவர் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர், முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தும் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுபவர். அந்த வகையிலே சிலை வைப்பதற்கு அவர் உடண்படுவார் என்ற விடயத்தில் எனக்கு உடண்பாடில்லை. இந்த சிலையினை வைத்தவர்கள் உடனடியாக அகற்ற முடியாத விடயமாக இருப்பதினால் அவர் மக்களுக்கு சூசகமான முறையிலே அதனை விளக்க முனைந்திருக்கலாம் என்பதே கருத்தாக இருக்கின்றது.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புல்மோட்டை அன்வரிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகளின் விரிவான ஆடியோ காணொலியானது எமது இணைய நாளிதல் வாசகர்களின் பார்வைக்கு இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஆடியோ புல்மோட்டை அன்வரின் ஆதங்கம்:-