ஹாசிப் யாஸீன்-
கல்முனை நெய்ட்டா நிறுவனத்தை அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியினை பிரதி அமைச்சர் ஹரீஸ்மேற்கொண்ட உடனடி நடவடிக்கையினால் முறியடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீஸ், கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கல்முனை நெய்ட்டாகாரியாலயத்தின் நிரந்தர கட்டட நிர்மாணத்திற்கு காணி வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வியாழக்கிழமை(10) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.முஹம்மட் கனி நெய்ட்டா நிறுவனத்திற்கான காணி உத்தரவுபத்திரத்தினை உத்தியோகபூர்வமாக நெய்ட்டா நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஏ.மசூரிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கே.எம்.தௌபீக்,நௌபர் ஏ. பாவா உள்ளிட்டபிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.