இலங்கை சிறுபான்மையினரை தன்வசம் ஈர்தத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் "புத்தளத்தில் புத்தெழுச்சி" விழா நேற்று (11) வெள்ளிக்கிழமை புத்தளத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியில் புதிதாக இணைந்துகொண்ட கே.ஏ. பாயிஸ் அவர்களையும் புத்தளம் நகர கட்சியின் போராளிகளினால் புத்தளம் மாநகர் முழுவதுமாக ஊர் வலமாக அழைத்துச் சென்றனர். பின்னர் புத்தளம் பொதுச் சந்தை அருகில் மாபெரும் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசல் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச். நியாஸ், எச்.எம்.றயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக் உட்பட அரசியல்பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.