இஸ்ஸதீன் றிழ்வான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹ்
அன்பின் ஆசான் மரியாதைக்குரிய PJ அவர்களே!
உங்களுடைய சுகம், தேகஆரோக்கியத்திற்கு அல்லாஹ்வை பிரார்த்தி ஆரம்பிக்கின்றேன்.
விடயம்: SLTJயை கட்டுப்படுத்துவது தொடர்பாக
இலங்கையில் இயங்கிவரும் SLTJ என்கின்ற கிளை தொடர்பான முக்கியமான விடயம் ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இலங்கையில் இயங்கிவரும் SLTJ அமைப்பு பல சமூகப் பணியை செய்து மக்கள் மனங்களை வென்றுவருவது குறித்து நான் சந்தோசமடைகின்றேன்.
ஆனால் இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை வம்புக்கு இழுத்தெடுக்கும் விதத்திலான அண்மைக்கால நிகழ்வுகள் சிறுபான்மை சமூகமாகிய முழு முஸ்லிம்களுக்குமெதிரான சவாலாக மாறிவருவது குறித்து கவனம் செலுத்தும்படியும் இதுதொடர்பாக இவர்களை கட்டுப்படுத்தும்படியும் TNTJ யின் ஸ்தாபகர் என்ற வகையில் உங்களை அன்பாக வேண்டுகிறேன்.
“புத்தர் மாமிசம் உண்டார்” என்ற பேச்சிலிருந்து ஆரம்பமான இனவாதம் இன்னும் தொடர்கின்றது. இது நாளுக்கு நாள் பெரும்பான்மை சமூகத்திலிருந்து புதிய புதிய இனவாதிகளை உண்டுபன்னுகிறது.
இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கென நீண்ட தொன்மைவாய்ந்த வரலாறும் மரியாதையும் இறுக்கின்றது, அது காலாகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது, அது ஒரு சில ஆக்குரோச பேச்சுக்களால் ஆர்ப்பாட்டங்களால் அழிந்துபோய்விடக்கூடாது.
ஹிக்மத்தான முறையில் பிற சமூகத்தின் மனங்களை வெல்லுகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் பொது விடயங்களில் இங்குள்ள பிற முஸ்லிம் அமைப்புக்களுடன் சேர்ந்துபோவதற்கும் ஆலோசனை வழங்குபடியும் இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.