ஜி.எஸ்.பி. பிளசுக்காக முஸ்லிம் தனியார் சட்டம் மாற்றம் கொண்டு வரக்கூடாது- ஆர்ப்பாட்டத்தில் SLTJ றஸ்மின்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ஜி.எஸ்.பி. பிளசுக்காக முஸ்லிம் தனியார் சட்டம் மாற்றம் கொண்டு வரக்கூடாது- அரசுக்கு எச்ரிக்கை- ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத்தின் உதவிப் பொதுச் செயலாளர் எப்.எம்.றஸ்மின்

இலங்கையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங் கொண்டு வர முனைந்தால் அதற்கு தாம் உடன்படப் போவதில்லை எதிர்த்து பாரிய தொடர் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் செய்வோம் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத்தின் உதவிப் பொதுச் செயலாளர் எப்.எம்.றஸ்மி தெரிவித்தார். இலங்கை ஜி.எஸ்.பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம்களின் தனியார் சட்டத்திலும் திருமண வயதைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளில் கைவைத்துள்ளதை கண்டித்து நேற்று (03) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரால் மாபெரும் கண்டனப் பேரணியின் பின்னர் இடம் பெற்ற நிகழ்விலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்;

 ஆண்களும் பெண்களும் சரிசமம் என்று கூறுகின்றார்கள் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு ஆம்பில வேர்க்கின்றது என்று சொன்னால் சட்டையைக் கழட்டி விட்டு றோட்டில் போவான் பொம்பல போவாளா? போக முடியாது அந்தவகையில்தான் இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றது.

இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற சட்டத்தை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றார்கள். அரசியல்வாதிகளும் இதனைப் புரியாமல் தாங்;கள் சார்ந்திருக்கும் கட்சிகளுக்க விசுவாசமாக இருப்பதற்காக அந்தக் கட்சியின் கரத்தை பிரதிபலிப்பதற்காக அறிக்கைக்குமேல் அறிக்கைளை விட்டு அறிக்கைப் போர் நடாத்துகின்றவர்களாக இருக்கின்றனர்.

கண்டிய திருமண முறைக்கு இதனைச் சொல்லுவீர்களா? அதனைச் சொல்லி இந்த திருமண சட்டத்தினை மாற்ற முடியுமா? அதனைச் சொல்லுவீர்களா? சொல்ல முடியாது நன்றாகப் பரிந்து கொள்ளுங்கள் இந்தச் சமதானத்தில் இருப்பவர்கள் பணத்திற்காக பல் இழிப்பார்கள், பதவிக்காக பல் இழிப்பார்கள் உரிமைகள் போனால்கூட கண்டுக்காமல் இருப்பார்கள் என்று அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றது. எங்கள் அரசியல்வாதிகள் பல் இழிக்கலாம் ஆட்சி மறினாலும் காட்சி மாறாது அரசியல்வாதிகள் அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கலாம், பாராளுமன்றத்தில் மௌனமாக இருக்கலாம் இதுபோன்ற ஒரு பிரச்சினை வரும்போது தவ்ஹீத் ஜமாத் சும்மா இருக்காது. தொண்டர்கள் பொங்கி எழுவார்கள்.

முஸ்லிம் சட்டத்தில் கைவைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ, ஐரோப்பிய யூனியனுக்கோ. இலங்கை அரசுக்கோ கடுகளவும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வுடைய சட்டத்தில் ஐரோப்பிய யூனியன் திருத்தம் கொண்டு வரப்போறியா? அமெரிக்காவில் கொண்டுவா அமெரிக்காவில் இன்றும் திருமண வயது 15 என உள்ளது 15க்கு கீழே கலியாணம் கட்டலாமா? எனக் கெட்டால் ஆமாம் எப்படியென்றால் 15 வயதுக்கு கீழே யாராவது ஒரு பெண்ணுக்கு கர்ப்பந்தரிக்க வைத்தால் அப்ப கட்டலாமாம். அப்ப யாராவது கலியாணம் கட்ட நினைத்தால் ஒரு பெண்னை கர்ப்பந்தரிக்க வைத்தால் கலியாணம் கட்டலாமாம். இது சிறுவர் உரிமையைப் பாதிக்க வில்லையா? பெண்கள் உரிமைகளை பாதிக்க வில்லையா? இதப்பொய்த் திரத்தலாம்தானே. இதனை விட்டு விட்ட இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் பெண்களின் வயது குறைவாக இருக்கின்றதாம் அதனால இலங்கை முஸ்லிம்களின் உரிமை பாதிக்கப்படுகின்றதாம்.

மனித உரிமை பாதுகாவளர்கள் மனித உரிமையைப் பாதுகாக்க ஓடோடி வந்துட்டாங்க வந்து நம்ம உரிமையைப் பாதுகாக்கப் போகின்றார்களாம். முதலில் அமெரிக்காவில் மனித உரிமைகளைப் பாதுகாத்தக் கொள்ளட்டும். அவர்களுக்கு 18 வயது என்று சட்டத்தைப் போட்டு அதில் மாற்றங் கொண்டுவா?

எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மார்க்க அடிப்படையில் நாங்கள் செய்வொம். இங்கு மூக்கை நுழைக்க வரக்கூடாது. மூக்கை நுழைக்க வந்தால் தொடர் போராட்டங்களை நாங்கள் நடத்துவோம்.. உங்களின் இந்த தில்லுமுல்லக்கு எதிராக நாடு பூராவும் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வோம். அரசாங்கம் அதனை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சட்டத்தில் மாற்றங் கொண்டு வரப்போறம் என்று 2009இல் மஹிந்த ராஜபக்ஷ அரசில் மிலிந்த மொறகொட ஜஸ்டிஸ் மினிஸ்டரா இருக்கும்போது ஒரு குழு அமைக்கப்பட்டது. முன்னால் நிதியரசர் சலிம் மர்சூக் தலைமையிலே ஏற்படுத்தி அந்தக் குழு ஏழு வருடமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்தத் திருத்தம் வேண்டும் என்று திருத்திக்கிட்டே இருக்கின்றார்கள்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணச் சட்டம், குழந்தையை தத்தெடுக்கம் சட்டத், வக்பு சட்டம், சொத்து விவகாரம், போன்ற முக்கிய சட்டத்தினை திருத்த ஏழு வருடம் தேவையா? இவ்வாறு கிடப்பில் போட்டதால்தான் இன்று சர்வதேசம் முஸ்லிம் சட்டத்தில் தலையிடுவதற்கு வழிவகுத்துள்ளது.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டாம் என்ற சொல்ல வில்லை திருத்தம் வேண்டும். முஸ்லிம் இஸ்லாமிய அமைப்புக்களைக் கொண்ட இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுதான் இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் என்னன்ன திருத்தம் செய்ய வேண்டும் என முடிவு எடுத்து குர்ஆனுக்கும், நபிகள் நாயகத்தின் வார்த்தைகளுக்கும் உடன்பாடான இஸ்லாமியச் சட்டத்தினைத்தான் கொண்டு வரவேண்டும். இதனை ஜி.எஸ்.பி. பிளசுக்காக அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. உடநடியாக தடுக்க வேண்டும் அந்த ஒப்பந்தத்ததை ரத்துச் செய்ய வேண்டும். அதுபோன்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும். அவர்கள் இனிப்போடும் சட்டங்களில் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பான எந்தவொரு வாசகங்களும் இடம் பெறக் கூடாது. அதனை மீறி முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி முஸ்லிம்களின் முதுகில் குத்தி முஸ்லிம்களின் மனதை சின்னாபின்னப்படுத்தி இந்தச் சட்டத்தினை நிறை வேற்றுவதற்காக இலங்கை அரசு முனைந்தால் மஹிந்த ராஜபக்ஷ ஜனவரி 8அம் திகதி பொட்டி படுக்கைகளுடன் விட்டுக்கச் சென்றாரோ அதேமாதிரி மைத்திரிபால சிறிசேனவும் செல்வார்.

இந்த நாட்டில் தவ்ஹீத் ஜமாத் எதனையாவது செய்யதால் ஒரு ஆளுக்கு சொறிச்சல்வரும் அவர் யாhர் தெரியுமா? நம்ம ஞாசார ஐயா இரக்கிறாரே அவருக்கு சொறிச்சல், அரிப்பு எல்லாம் வரும் அவருக்கு வெண்டோல் வெனிவென் வாங்கிக் கொடுக்கனும். ஞானசாரர் முஸ்லிம்கள் ஜி.எஸ்.பி.பிளசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் நாங்கள் அடித்த விரட்வோம் என்று கூறினார். வாங்க பார்ப்போம் எனச் சவால் விட்டார். எனவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைத்தால் மைதிதிரி, ரணில் விட்டுக்குப் போக வேண்டி வரும் எனவும் காரசாரமாகத் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -