ஹெண்டா Vezel மற்றும் Toyota Premio ஆகிய கார்களுக்கான இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்டிக சம்பத் மெரன்ஜிகே இதனை குறிப்பிட்டுள்ளளார்.
மேலும், வற்வரி அதிகரிக்கப்பட்டமையினால் குறித்த வாகனங்களின் விலைகள் 3முதல் 4 இலட்சம் வரை அதிகரிக்கப்படலாம் என கூறியுள்ளார்.
புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள கார்கள் மற்றும் முன்னதாகவே இறக்குமதி செய்யப்பட்ட கார்களும் ஒரே வகையிலேயே வகைப்படுத்தப்படும் என்றும் அவற்றுக்கான கட்டணங்களும் ஒரே மாதிரி அமையும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.