சவுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்ட பிலிப்பீனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை

ராக் மற்றும் சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பீனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறைத் தண்டனை முடிந்த பின்னர் அப்பெண்னை பிலிப்பைனுக்கு நாடு கடத்தும் படியும் சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டமை, லிபிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டமை, பயங்கரவாத தாக்குதல் நடாத்த திட்டமிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். 

1984 ஆம் ஆண்டு பிறந்த இப்பெண் பணிப்பெண்ணாக சவுதிக்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்புப் பிரிவினரினால் இவரது இலத்திரனியல் உரையாடல்கள் ஒத்துப் பார்க்கப்பட்டதன் பின்னர் இவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பிருப்பது ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இவர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவர் எந்த நேரத்திலும் ஐ.எஸ். இயக்கத்துக்காக தாக்குதல் நடாத்த தயாராகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் சவுதி செய்திகள் தெரிவித்துள்ளன.டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -