சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடங்கள்..!

சுனாமி அனர்த்தம் கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிகழ்ந்தது. இந்த அனர்த்தத்தில் 35 ஆயிரம் இலங்கையர்கள் மரணத்தைத் தழுவினர். 13 மாவட்டங்களிலுள்ள 57 பிரதேச செயலகங்களில் இந்த சுனாமியின் அனர்த்தத்தை மக்கள் உணர்ந்தனர். 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். ஒரு லட்சம் வீடுகள் அழிவுற்றன.

சுனாமியினால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 3800 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டது. இந்த சுனாமிக்கு இந்தோனேசிய சுனாமி, நத்தார் சுனாமி, பொக்ஸின் சுனாமி, தென்னாசிய சுனாமி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்­தோ­னே­ஷியா சுமத்ரா தீவில் ஏற்­பட்ட கட­லுக்­க­டி­யி­லான நில­ந­டுக்கம் சுனாமி ஆழி பேர­லை­யாக இலங்கை உட்­பட பல நாடு­க­ளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்­களை பறித்தும் பல்­லா­யிரம் கோடி­க­ளுக்கு பொரு­ளா­தார பேரி­ழப்பை ஏற்­ப­டுத்தி நாம் கண்ணீர் சிந்­தி­ய­தையும் மறந்­துவிட முடி­யாது.

ஒரு சில நிமி­டங்­களில் ஆசியா கண்­டத்தின் 10 நாடு­களில் அவற்றை ஒட்­டி­யுள்ள தீவு­களில் மூன்று இலட்சம் வரை­யான மக்கள் அழிந்­தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிரா­மங்­களை இழந்து விட்­டி­ருந்­தது. அவற்றில் பல மனி­தர்­களால் நிரந்­த­ர­மாக கைவி­டப்­பட்ட கிரா­மங்­க­ளா­கவும் போய்­விட்­டன.

சுனாமி ஏற்­பட்டு 12 வரு­டங்கள் கடந்­தி­ருக்­கின்­றது. ஆனால் அதன் வடுக்­க­ளி­லி­ருந்து இன்னும் இலங்­கையின் சில பகு­திகள் மீளாத நிலையில் உள்­ளது. இங்கு கவ­னிக்­கத்­தக்க விடயம் யாதெனில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பிர­தேசங்­களை மிக விசேட கவனம் செலுத்தி மீள் கட்­டு­மான வேலைகள் அதி தீவி­ர­மாக கடந்த 2005, 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நடந்­தேறி முடிந்­துள்­ளது. ஆனால் எமது சில பிர­தே­சங்கள் கவ­னிப்­பா­ரற்று கிடக்­கின்­றன. 

அக்­க­ரைப்­பற்­றிலும் அதனை அண்­டிய பிர­தே­சங்­க­ளிலும் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கென்று சவூதி அரே­பிய அர­சினால் கட்­டப்­பட்ட வீட்­டுத்­திட்டம் இன்னும் உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இது கானல் நீரான கதை­யாகிப் போயுள்­ளது. 

தற்­போது இந்த வீடுகள் விஷ ஜந்­துக்­களும் மிரு­கங்­க­ளுக்­கு­மான குடி­யி­ருப்­பாக மாறி­யி­ருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல் பல்­வேறு குற்றச் செயல்­களும் அங்கு இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த விட­யத்தில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் படு­தோல்வி அடைந்­துள்­ளனர். பேரி­ன­வாத சக்­தி­களின் விடாப்­பி­டி­யான துவேச நிலை­மைகள் அர­சி­யல்­வா­தி­களின் பொடு­போக்கு என்­பன இதற்குக் கார­ணங்­க­ளாகும். 

இவ்­வா­றான ஒரு இயற்­கையின் சீற்றம் ஏற்­ப­டும்­போது மக்­களே விழிப்­பா­கவும் சிறப்­பா­கவும் தங்­களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்­பதை கடந்­த ­சு­னாமி பேர­ழிவு எமக்கு பாடம் சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றது.

சுமத்ரா தீவுப் பகு­தியில் ஏற்­பட்ட பூகம்பம் 8.9 ரிச்டர் அளவு பதி­வா­கி­யுள்­ளது. கடற்­ப­ரப்பில் ஏற்­பட்ட இதே­வே­க­முள்ள நில­ந­டுக்கம் தரைப் பகு­தியில் ஏற்­பட்­டி­ருந்தால் ஆசி­யாவின் பல நாடுகள் தரை மட்­ட­மா­கி­யி­ருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணு­குண்­டுகள் வெடித்­த­தற்குச் சம­மாக இருக்கும் என்று புவி­ய­மைப்­பியல் வல்­லு­நர்கள் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தனர்.

அதுபோல் அண்­மை­யிலும் பசுபிக் பெருங்­க­டலில் அவுஸ்தி­ரே­லி­யா­வுக்கு அருகே உள்ள தீவு நாடான பப்­புவா நியூ­கி­னி­யாவின் தரோன் நகரில் மிக பயங்­க­ர­மான நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது. இது ரிச்­டரில் 8 ஆக பதி­வாகி இருந்­தது. இதை­ய­டுத்து பப்­புவா நியூ­கி­னி­யாவின் கிழக்குப் பகு­தியை சுனாமி பேர­லைகள் தாக்கும் என எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதுபோல் உலகின் பல்­வேறு நாடு­க­ளிலும் அடிக்­கடி இந்­நில நடுக்கம் ஏற்­ப­டு­வதும் சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டு­வதும் தற்­போதும் நிகழ்ந்­த­வண்­ணமே உள்­ளமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்து போனது. அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்.

உலகில் சுனாமி, பூகம்பம், புயல், மழை வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக 1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர், 1935 ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976 ல் சீனாவில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978 ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல்.

இவை தவிர சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது. இவை அனைத்தும் மனிதனை துய்மைப்படுத்தவும், சிந்திக்கவும் வைத்தது.

அனர்த்தங்கள் சம்பவிக்கும் வேளைகளில் அவற்றிற்கு ஆயத்தமாகும் முகமாக அனர்த்த முன்னாயத்த திட்டங்கள், அறிவூட்டல், அனர்த்த அறிவிப்பு ஒலியெழுப்பல், சகல மட்டங்களிலும் விருத்தியாக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டம் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கை ஆகியவற்றிலும் இந்த விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவம் பல்வேறு செயற்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டு கட்டளை இடுதல் கட்டுப்படுத்தப்படுத்தல்களை விட ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் விதத்தில் நிறுவக மாதிரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் கட்டளை இடுதலும், கட்டுப்படுப்படுத்தலும் ஒவ்வோரு அரச நிறுவன அதிகாரிகளுக்கிடையிலேயே பொருந்தக்கூடும். ஒப்படைக்கப்பட்ட பணி, பொறுப்புக்கள் மற்றும் ஆற்றல் வாய்ந்த முகவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புமே முக்கிய அம்சங்களாகும். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கொண்டு இருக்கையில் மாகாண அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு, மாகாண, மாவட்ட, உள்ளுராட்சி, பிரதேச, கிராம சேவையாளர் மட்டங்களில் பதிலிறுப்பு, மீளுமை பிரயத்தனங்கள்,முகாமைத்துவம், அவசர தகவல்களைப் பரப்பல் போன்றவற்றிற்கான ஒருங்கிணைப்புப் பிரிவாக செயற்படுகிறது. இது நிருவாக கட்டமைப்பு விடயங்களாகும்.

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை 'பிலோப்போனேசியப் போர் வரலாறு' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நில நடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நில நடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து இராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில் கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப் பிரிய அதன் தட்டு வெப்ப இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் இவ்வாறு தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும். இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்கான் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும்.

ஏப்ரல் 1946, அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ் நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது.

1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை 'சியோருக்கஸ்' என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958ல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாஸ்காவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது.

சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. 

மிகப்பெரிய சுனாமியைத் தவிர நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர் அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை 'துறைமுக அலை' என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். இது நாம் கண்ட சுனாமி பேரலையிலும் நடந்ததை சுட்டிக்காட்ட முடியும். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகமாக உயரும். இதை 'ரன்' என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம்.

சுனாமி பேரலை தாக்கி 12 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மனிதர்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழி ஒன்றாகும். வெறுமனே நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி ஒவ்வொரு வருடமும் இழந்த உயிர்கள், உடமைகளை நினைத்து அழுது புலம்பி கட்டிப் புரள்வதில் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்பட்டு விடப்போவதில்லை.
எஸ்.அஷ்ரப்கான்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -