டூயல் பிரைமரி கேமரா கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கூல்1 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிட்டது. லீஇகோ நிறுவனத்துடன் கூல்பேட் இணைந்து வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூல்பேட் கூல்1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
கூல்1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் லீஇகோ யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு இரட்டை 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை கூல்1 ஸ்மார்ட்போனில் 4G, எல்டிஇ, 3G, வைபை, ப்ளூடூத், GPS மற்றும் யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்டவையும் 4060 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூல்பேட் புதிய மெகா 3 மற்றும் நோட் 3S ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.6999 மற்றும் ரூ.9999 என்ற விலைகளில் வெளியிட்டது. கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் மூன்று சிம் வசதி, 5.5 இன்ச் எச்டி IPS எல்சிடி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.
இத்துடன் மீடியாடெக் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட், 2GB ரேம், 16GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.(மாம)