சுலைமான் றாபி-
பொலிஸ் திணைக்களத்தின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் சமூக சேவைப்பிரிவினரால் பல்வேறு நிகழ்வுகள் நாளை 17 ம் திகதி (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நிந்தவூர் மீனா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ப்ரியலால் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 08 அணிகள் பங்கு பற்றும் அணிக்கு 07 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக சேவைப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். அமீர் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க பிரியந்த, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜே.எஸ். கருணாசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், கல்விமான்கள் சமூகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதோடு, நிந்தவூரில் அமைய பெற்றிருக்கும் நடமாடும் பொலிஸ் சேவை நிலையமானது அன்றைய தினத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.