கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவதிகளுக்கு இன்று காலை திருகோணமலை விவேகானந்தா மகாவித்தியாலய மண்டபத்தில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் எம் அன்சார் தலைமையில் 200 பேருக்கு அரச நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கிவைத்த இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்வி அமைச்சர் தண்டாயுத பாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், விவசாய அமைச்சர் இரா துரைராஜசிங்கம். மற்றும் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், ஜனார்தனன், கருணாகரன், துரை ரட்ணம், எச்.எம்.லாஹீர் அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எம்.அசீஸ் இன்னும் பல உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கிவைத்தனர்.