காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்தில் இன்று 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை 299 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி தெரிவித்தார்.
இந்நிகழ்வு திருகோணமலை இந்துக்கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.
இவர்கள் கணித விஞ்ஞான ஆங்கில பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் கூறுகையில்
போட்டிப்பரீட்சையில் தெரிவான 345 பட்டதாரிகளுள் நேர்முகப்பரீட்சை மூலம் 299பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நேற்று கல்வியமைச்சிடம் கையளித்துள்ளது.
இவ்வாண்டுக்குள் அதனை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக அறிவித்து வழங்கவுள்ளோம்.
எனவே அவசர அவசரமாக அத்தனை பட்டதாரிகளுக்கும் தொலைபேசசி வாயிலாக அறிவித்துள்ளோம்.
இவர்கள் ஜனவரி 2ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகியதும் பாடசாலை சென்று கடமையை பொறுபேற்கவேண்டும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -