பட்டதாரிகளில் தெரிவு செய்யப்பட்ட 299 ஆசிரியர்களுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்பட்டன -படங்கள்

அப்துல்சலாம் யாசீம்-

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானம்.கணிதம் மற்றும் ஆங்கில் பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் திருகோணமலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானம்.கணிதம் .மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கு 1134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1502 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் கோரப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 299 ஆசிரியர்களுக்கே இந்நியமனம் வழங்கப்பட்து.

இதில் மட்டக்களப்பு.திருகோணமலை.அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கே சிங்கள மொழியில் விஞ்ஞான பாடத்திற்கு 29 பேரும் தமிழ் மொழி பாடத்திற்கு 97 பேரும் கணித பாடத்திற்கு சிங்களத்தில் 06 ஆசிரியர் நியமனங்களும் தமிழ் மொழி ஆசிரியர்கள் 43 பேருக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் 91 பேருக்கும் ஆங்கில டிப்ளோமா முடித்த 33 ஆசிரியர்களுக்குமே இந்நியமனம் வழங்கி வைக்கப்ட்டதாகவும் கல்வி திணைக்களத்தின்அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தணடாயுதபாணி. வீதி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேவீர கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்தன என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -