மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஏறாவூரின் பல பகுதிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியினால் 36 மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றும் கட்டமைப்புநிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மிச் நகரில் முற்பகல் 9 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ் எல் எம் ஹனிபா உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில்பங்கேற்றிருந்தனர் .
ஏறாவூரின் தாழ்நிலப் பகுதிகள் அடிக்கடி மழைக்காலங்களில் வௌ்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
தக்வா பள்ளிவாசல் பகுதி.ஷாகிர்மௌலானா வித்தியாலய பகுதி,மிச் நகர் பாடசாலை பகுதி ,மிச் நகர் பள்ளிவாசல் பகுதிமற்றும் ரயில்வே கடவை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைக்காலங்களில் வீடுகளைவிட்டு வெளியேறி அடிக்கடி பொதுஇடங்களில் தங்கவேண்டியுள்ளமை மக்களுக்கு பாரிய நெருக்கடியாக உள்ளமையை தாம் அறிவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் கழிவு நீர் அகற்றும் கட்டமைப்புக்கள் போதிய அளவில் இன்மையே இதற்கு காரணம் என்பதால் உடனடியாக அதனை நிவர்த்தித்து மக்கள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படகாமல் இருக்கநடவடிக்கை எடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட இடர் முகாமைத்துவ அமைச்சர் உடனடியாக தமதுஅமைச்சில் நிதியை ஒதுக்கி அந்த திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் முதலமைச்சரின் முயற்சியினால் ஏறாவூர் நகரில் வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய 5 மதகுகள் மற்றும்கழிவகற்றும் கட்டமைப்பு ஆகியன 36 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அரசாங்கம் தற்போது பாரிய நிதி நெருக்கடியில் உள்ள நிலையிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதியை தாம் எந்த வகையினாலேனும் கொண்டு வந்து சேர்த்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இங்குஉரையாற்றுகையில் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தாம்எந்நேரமும் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமது வீட்டுக்கு அருகில் உள்ள வீதிகளையும் வடிகான்களையும் செப்பனிட கொடுக்கும் முன்னுரிமையை மக்கள் துயர்படும் பகுதிளுக்கு வழங்காமை வேதனையளிக்கும் விடயம் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.