காரைதீவு நிருபர் சகா-
இலங்கையிலிருந்து பாக்கினை ஏற்றுமதி செய்யும்நோக்கில் கமுகு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு ஆரம்ப கைத்தொழில் விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேசத்தைத் தெரிந்த கமுகம்பிள்ளைகளை இலவசமாக வழங்கி அவை வளர்ந்த பின்னர் பாக்கினை சந்தைப்படுத்த செயற்பாட்டை மேற்கொள்ள திட்மிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கமுகம்பிள்ளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அம்பாறை புதியவளத்தாப்பிட்டியில் நடைபெற்றது. 80குடும்பங்களுக்கு சுமார் 4000 கமுகம் பிள்ளைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இத்திட்டம் தொடர்பாக இணைப்பாளர் வி.வினோகாந் தகவல் தருகையில் :
ஒவ்வொரு குடும்பமும் 50 தொடக்கம் 100 வரையிலான இடப்பரப்பிற்கேற்ப கமுகம்பிள்ளைகள் உற்பத்திசெய்து வளர்த்து பின்னர் பாக்களை சந்தைப்படுத்துவதனூடாக வருவாயை ஈட்டிக்கொள்ளமுடியும்.
தயா பவுண்டேசன் நிறுவன உதவியுடன் ஆரம்பகைத்தொழில்கள் அமைச்சு இக்கமுகம் பிள்ளைகளை இலவசமாக வழங்கியது.
நிறுவனத்தின் பிரதிநிதியாக பிரதியமைச்சர் அனோமா கமகேயின் தமிழ்ப்பிரதேச இணைப்பாளர் வி.வினோகாந் கலந்துகொண்டு இவற்றை புதியவளத்தாப்பிட்டி மக்களுக்கு வழங்கிவைத்தார்.