விவசாயத்துக்கு நீர் இல்லை இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்-இந்தியா

சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடருகிறது. இன்றும் 5 விவசாயிகள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீரை கர்நாடகா திறக்க மறுத்ததாலும் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது.

VIDEO : தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரிக்கை அமைச்சர்களுடன், விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை..

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரிக்கை அமைச்சர்களுடன், விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை...
Politics

இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். வேளாண் பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்து மாண்டுபோகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி பிற மாவட்ட விவசாயிகளும் உயிரிழக்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இன்றும் நாகை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 11 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -