520மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை







ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ரூபா 520 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள சகல வகதிகளுடன் கூடிய நவீன கட்டடத் தொகுதியொன்று எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினை வரவேற்பது தொடர்பாகவும், குறிப்பிட்ட கட்டிடத் தொகுதியின் குறை நிறைகளைக் கண்டறிந்து உடன் தீர்த்து வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கும் கூட்டமொன்று இன்று (28) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், மட்டக்க ளப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி.எல்.எம்.நவரத்ன ராஜா, கணக்காளர் எஸ்.விக்னராஜா, நிருவாக உத்தியோகததர் திருமதி.நித்தியராஜன், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.நயீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், அரச ஒப்பந்தகாரர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலையும், மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படவிருக்கும் கட்டிடத் தொகுதியையும் நேரடியாகப் பார்வையிட்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்;, சில குறைபாடுகளைக் கண்டு அவற்றை உடன் சீர்செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறைசார் நிபுணர்களுக்கு உத்தரவிட்டார். 

மாகாண சுகாதார அமைச்சர் நசீர்; இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' நமது கிழக்குப் பிராந்தியத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்தி மூவின மக்களும் தேகாரோக்கிமுள்ள சமூகங்களாக வாழவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் யார் யாரெல்லாம் உழைத்தார்களோ அவர்கள் எந்தக் கட்சிக் காரர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு அழைத்து அவர்களையும் கௌரவப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களை அன்பாய் வேண்டுகிறேன்' எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -