இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட அக்னி - 5 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அக்னி - 5 ஏவுகனையானது அப்துல் கலாம் தீவில் வைத்து இன்று 11.05 மணியளவில் ஏவப்பட்டுள்ளது.
'அக்னி–5' ஏவுகணையானது சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கக்கூடியதெனவும், இன்று விண்ணில் ஏவப்பட்ட நிலையில் தூரம் மற்றும் இலக்கை சரியாக தாக்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகனையின் மூலம் சீனா, பாகிஸ்தான் மற்றும் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை முழுவதுமாக தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டமைக்கு இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.