டெங்குக் காய்ச்சலால் கல்முனையில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் -

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு நுளம்பின் பெருக்கம் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.

அந்தவகையில் கடந்த (29) ம் திகதி கல்முனையைச்சேர்ந்த 5 வயது சிறுவன் டெங்குக் காய்ச்சலினால் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சிறுவனே தீவிர சிகிச்சைகளின் பின்னர் (29) உயிரிழந்துள்ளார் .

கல்முனை குடி 16 ஐச் சேர்ந்த அகமது அதீப் என்ற 5 வயது சிறுவனின் உயிரையே டெங்குக் காய்ச்சல் பறித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் 14 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்பான எமது உறவுகளே :

எமது பிள்ளைகள் எமது உறவுகள் தான் இவ்வாறு டெங்குக் காய்ச்சலால் மரணமடைகிறார்கள் தயவு செய்து இந்த உயிர்கொள்ளி டெங்கு நுளம்பினை அழிப்பதர்காக அவைகள் உருவாகக்கூடிய குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள் போன்ற இடங்களை இல்லாது ஒழித்து எம்மையும் எமது சமுகத்தினையும் பாதுகாப்போம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -