காரைதீவில் 67 கடலோரக்கிணறுகள் தகர்ப்பு..!

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுப்பிரதேசத்திலுள்ள 67 கடலோரக்கிணறுகள் தகர்க்கப்பட்டுள்ளன. இக்கிணறுகள் பலவருடகாலமாக பயன்படுத்தாமலிருந்துவந்தன. டெங்குநுளம்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை புல்டோசர் கொண்டு இக்கிணறுகளை தகர்த்துள்ளது.

அண்மையில் புதிதாக நிரந்தரமாக நியமிக்கப்பட்ட காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னீன் முத் டெங்குநோய்த்தடுப்புச்செயற்றிட்டத்தின்கீழ் இவ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

பாவிக்கப்படாமலிருந்து வந்த இக்கிணறுகளில் டெங்கு நோய் நுளம்புகளுக்கான வாழ்வியல் பருவத்தடயங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. ஆழிப்பேரலை அனர்த்திற்கு முன்பு கடலோரத்திலிருந்த மக்களது குடியிருப்புகளின் கிணறுகளே அவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சோதனை திவீரம்!

இதேவேளை நேற்று ஆரம்பமான மிகத்தீவிரமான டெங்குநோய் பரவும் இடங்களைத்தேடிக்கண்டுபிடித்து அழிக்கும் செயற்றிட்டம் தொடர்ந்து இருதினங்கள் நடைபெறும்.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியபணிமனை ஊழியர்களோடு பொலிசார் இராணுவம்;இணைந்து இச்சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது நேற்று டெங்குநோய்க்கான குடம்பிகளை வளர்க்க சாதகமாகச்செயற்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்துவரும் தினங்களிலும் இவ்வாறான குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால்; அவ்வீட்டுரிமையாளர்கள்மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வைத்திய அதிகாரி றிஸ்னீன் முத் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவித்தல்கள் ஊரெங்கும் ஒலிபெருக்கிவாயிலாக அறிவிக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை காரைதீவில் 33 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததாயினும் மாறிவரும் அசாதார காநிலை காரணமாக விழிப்பாயிருக்கவேண்டிய கட்டாயமுள்ளதென வைத்திய அதிகாரி றிஸ்னின் முத் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆபத்தான இடங்களெனக்கருதப்படும் பிரதேசங்களுக்கு புகை விசிறும் செற்பாடு தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -