அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை என்றால் உயர்பீட உறுப்பினர் 6 பேர் இராஜினாமா..!


ட்டாளைச்சேனை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான  கூட்டம் ஒன்று அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை அனைத்து பள்ளிவாசல் தலைவர் எஸ்.அனீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அட்டாளைச்சேனை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில் அங்கு கூடியிருந்த உயபீட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இறுதியாக அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் இங்குள்ள 06 உயர்பீட உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று தீர்மானமாகக் கேட்டுக்கொண்டனர். 

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில்
பிரதித் தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, உறுப்பினர் யாசிர் ஐமன் அவர்களுடன் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எம்.ஏ.கபூர், யூ,எம்.வாஹிட் எஸ்.எல்.எம்.பழீல் ஆகியோருடன் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஆனால் குறித்த கூட்டத்துக்கு அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -