மேலும் சிலர் தங்களின் ஐபோன் 7 பிளஸ் கேமரா ஆப் தவறான ஹீட் வார்னிங் தெரிவித்து திடீரென ஷட் டவுன் ஆவதாக தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஆப்பிள் நிறுவனம் பிரச்சனை ஏற்பட்ட ஐபோன்களை மாற்றி புதிய ஐபோன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு ஐபோன்களில் தரவுகளை பரிமாற்றம் செய்யும் சிறிய கேபிளில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் சீனாவில் ஐபோன் 7 பிளஸ் கீழே விழுந்ததும் தீ பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு மேலும் சிலர் தங்களது ஐபோனில் இருந்து தீ பிடித்ததாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் போன்களை வெளியிட்டது. முன்னதாக ஆப்பிள் வெளியிட்டிருக்கும் புதிய ஐபோன்களில் இருந்து விசித்திரமான சத்தம் வருவதாக கூறப்பட்டது. சிலர் இந்த சத்தம் பிராசஸர் இயங்கும் போது ஏற்பட்டதாக தெரிவித்தனர்.