அஸ்மி அப்துல் கபூர்-
அதாஉல்லாஹ் வின் புதிய கட்சி உருவாக்கத்தை புரிந்து கொள்ள தவிசாளருக்கும் செயலாளருக்கும் பதினான்கான்டுகள் சென்றிருக்கின்றன.என்றால் பாமரர்களை எவ்வாறு நாம் தவறிழைத்ததாக கூற முடியும்.நோர்வை அரசு பலஸ்தீனத்தை இஸ்ரேலுக்கு தாரை வார்த்து கொடுத்ததை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு யசிர் அறபாத் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டார்.
அதே போலதான் சில மேற்கத்தேய நாடுகள் இலங்கை யை அவர்களின் ஆயுத விற்பனை தளமாக மாற்ற எடுத்த இந்த நாட்டை அவர்களின் ஆளுகைக்குள் கொண்டு வர பெறப்பட்ட முயற்ச்சிகளின் அடிப்படையில் தான் சந்திரிகா பண்டாரநாயக்க அவர்கள் ஜனாதிபதி யாக இருந்த போது மறைந்த தலைவர் அஷ்ரப் அதற்க்கு விட வில்லை அதனால் அம் மனிதனை மிகவும் சூழ்ச்சி கரமான முறையில் சதி செய்து கொலை செய்தனர்
அதன் பின்னர் இந்த ரணிலின் ஆட்சியை உருவாக்கி தாங்கள் பினாமியாக நியமித்த முகா வினுடைய தலைமையை கொண்டு எம் சமுகத்தின் வாயை பொத்தி எம்மை ஒரு குழு வாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார்
அதன் பின்னர் அதாஉல்லாஹ் உள்ளிட்ட அதிஉயர்பீட உறுப்பினர்கள் கிளர்ந்து கிழக்கின் இருப்பை உறுதிப்படுத்தி கொள்ள வெளியே வந்த போது சகோ பசீர் ஹசனலி போன்றோர் மிக உறுதியாக ரவூப் ஹக்கீமை நம்பினார்கள்
அன்றே அதாஉல்லாஹ் ஹசனலியிடம் அல்லது பசீர் இடமோ சொல்லி இருக்க வேண்டும் என்றாவது ஒருநாள் அனுபவிப்பீர்கள் என என் மனம் எண்ணுகிறது அதுதான் இன்று நிகழ்ந்திருக்கிறது.
அதாஉல்லாஹ் வின் பிரிவின் முன்னோ பின்னோ சமுகத்திற்காக கட்சி யை தூக்கி எறிந்தவர்களை உங்களால் அடையாளப்படுத்த முடியுமா?அதன் பின் சந்திரிகாவுடன் இணைந்த அதாஉல்லாஹ் பின்னர் மகிந்தவுடனும் இணைந்து இஸ்லாத்தின் விரோதிகளான நோர்வே யின் எஹூதிகளையும் அவர்களின் ஏஜன்டுகளையும் நாட்டை விட்டு ஓட ஓட விரட்டினார்
அந்த பொழுதிகளிலேல்லாம் வெறும் நாற்பதாயிரம் அம்பாரை மாவட்ட முஸ்லிம் வாக்காளரை வைத்திருந்த அதாஉல்லாஹ் வால் ஆட்சி மாற்றங்களை உருவாக்கி ஜனாதிபதி களையும் தேர்ந்தெடுக்க கூட தகைமையை பெற்றார்ஆனால் ரவுப் ஹக்கீமால் ஏலவே சோரம் போனவர்களின் கதையை நம்ப ரணிலுக்கும் பொன்சேகாவும் ஆதரவளிப்பார் பின்னர் உயர் பீட கெடுபிடியால் மகிந்தவுடன் மாறுவார் இதனுடைய தொடர்ச்சியாகதான் ஞானசாரவை மிகத் தெளிவாக பயிற்றுவித்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தினார்கள் அதுவே இன்று நோர்வை காரர்களை நாட்டிற்க்கு உள்வாங்கி முஸ்லீம் சமுகத்தை சிதைக்கின்ற மிகப் பாரிய சதியும் நிகழ்கின்றது.
இவர்களால் ஞானசாரவை ஒரு போதும் ஏதும் செய்து விட முடியாது.
எனவே காலத்துக்கு காலம் புதியவர்களையும் கட்சியின் அடையாளத்தை சிதைத்தவர்களையும் சுயநல விரும்பிகளையும் உள்வாங்கி அதாஉல்லாஹ் வின் பிரிவின் பின்னர் ஐதேக முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கியது போல
கட்சியின் முக்கியதுவம் வாய்ந்த பொறுப்புமிக்கவர்களை நீக்கி தங்களது அதிகாரங்களை தக்க வைக்கின்ற நடவடிக்குகளுக்கெதிராக இன்றிருக்கின்றவர்கள் ஓரணியாக தமது குரலை உயர்த்தி சமுகத்திற்காக பேச வேண்டியது கடமை.