இப்பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வினை சமகாலத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினால் நம்படுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், கிழக்கின் முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினதும் நேரடி கவனத்திற்கு கொண்டு வரும் அதே இடத்தில்…..
குறித்த கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலகம்,பிரதேச சபை எல்லைகளுக்குட்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக விரிவாக ஆராய்கின்ற பொழுது 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 1000 முஸ்லிம் குடும்பங்கள் மதுரங்கேணிக்குளம்,
2ஆம் கட்டை கிரிமிச்சை,
3ஆம் கட்டை கிரிமிச்சை,
4ஆம் கட்டை குஞ்சம்கல்குளம்,
சாம்பல்கேணிக்குளம்,
தோணிக்கல்,
வட்டக்கல்,
ஆலிமுட ஊத்து,
ஓமணியாமடு
போன்ற கிராமங்களில் வேளான்மைச் செய்கைகள்,சேனைப்பயிர்ச் செய்கைகள்,கால்நடை வளர்ப்புக்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார்கள்.
இம்மக்களுக்கான பாடசாலையில் ஆசிரியர்களாக மர்ஹூம்களான மீராவோடை-செம்மண்ணோடை ஷிஹாப்தீன் ஆலிம்(பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் தந்தை)
வாழைச்சேனை ஆதம்லெப்பை ஆலிம் (இத்ரீஸ் நளிமியின் தந்தை)
மீராவோடை பாறுாக் மௌலவி,
ஓட்டமாவடி யாக்கூப் ஆசிரியர்
உட்பட இப்பாடசாலையில் கடமையாற்றினர்.
1972 ஆம் ஆண்டு கல்குடாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தேவநாயகம் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் திரு பிரட்மன் வீரக்கோன்,
திட்டமிடல் பணிப்பாளர் திரு.சங்காரவேல் ( பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணேசலிங்கம் இன் சகோதரர்).
உள்ளடக்கிய குழு அன்றைய கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து மதுரங்கேணிக்குளம் 90 குடும்பங்களுக்கு நெற்காணி,
குடியிருப்புக் காணி,
சேனைப்பயிர்ச் செய்கைக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கல்குடாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தேவநாயகம் அவர்கள் பிரதமர் ஜயவர்த்தனா அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் நீதி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்று கல்குடாத் தொகுதிக்கு முதல் வேலையாக,சேவையாக மதுரங்கேணிக்குளத்திற்குச் செல்லும் பாதைகளை அபிவிருத்தி செய்து பஸ் போக்குவரத்துக்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
1986 ஆம் ஆண்டு காணி அனுமதிப் பத்திரங்கள் கொடுக்கப்படாதிருந்த 660 குடும்பங்களுக்கு காணி உத்தயோகத்தர் திரு.மார்க்கண்டன்,குடியேற்ற உத்தியோகத்தர் திரு,சோமசுந்தரம் ஆகியோரால் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
L.V.2ஆம் பிரதான வாய்க்கால் முதலாம் கண்டத்திலிருந்து 67 ஆம் கண்டம் வரை நெற்காணி 3 ஏக்கர்,குடியிருப்புக்காணி 1/2 ஏக்கர்,சேனைப்பயிர்க்காணி 1 1/2 ஏக்கர் விகிதம் ஒருதருக்கு வழங்கப்பட்டன.
கோறளைப்பற்று வடக்கு -வாகரை பிரதேசத்தில் பாரிய முஸ்லிம் கிராமங்களாக மதுரங்கேணிக்குளம்,
கிரிமிச்சை ஓடை,
குஞ்சம்கல்குளம்,
ஓமணியாமடு
போன்ற கிராமங்களாகும்.
2005 ஆம் ஆண்டு ஓமணியாமடு கிராமத்தில் மாத்திரம் 350 தமிழ்க் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நெற் செய்கைக்காணிகளை தமிழ் மக்களே நெற்செய்கை மேற்கொள்கிறார்கள்.
1990 ஆம் ஆண்டு வரையுள்ள வாக்காளர் இடாப்புக்களில் முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் பதிந்துள்ளன.
வாகரை கமநல கேந்திர நிலையத்தில் முஸ்லிம்களின் நெற்காணிகளுக்குரிய காணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்களிடம் அதற்கான ஆதரங்கள் உள்ளன.
மேலும்
1.கல்முனை,
2.மருதமுனை,
3.நற்பிட்டிமுனை,
4.சாய்ந்தமருது,
5.சம்மாந்துறை
போன்ற ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் பாரிய கால்நடைகள் வளர்ப்புப் பண்ணைகள்,விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நிரந்தரக் குடியிருப்பாளர்களாக வாழ்ந்து வந்து இம்மக்களும் அனைத்தையும் பறிகொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
1.முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் பதிவிலக்கம் -
R/1429/BT-176(56)
2.குர்ஆன் பாடசாலை பதிவிலக்கம் -
R/1512/BT-179(55)
3.கிராம அபிவிருத்திச் சங்கம் பதிவிலக்கம் -
R/1512/BT-180(52)
4.ஐக்கிய தேசியக் கட்சி கிளை பதிவிலக்கம் - 96/6
5.தமிழரசுக் கட்சி கிளை பதிவிலக்கம் - 77-5
6.விவசாய சம்மேளன பதிவிலக்கம் -
NEP/BT/685/FO/07
மதுரங்கேணிக்குளத்தில் அரச,அரசியல் திணைக்களங்களில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்ட முக்கிய நிறுவனங்கள்.
1990 ஆம் ஆண்டு பலர் கொலை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அத்தனை சொத்துக்ளையும் இழந்து முழுமையாக வெளியேற்றப்பட்டனர்.
கோடிக்கணக்கான சொத்திழப்புக்கள் ஏற்பட்டும் இம்மக்களுக்கான எந்தவித நஸ்ட்ட ஈடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டபோதெல்லாம் இம்மக்கள் அரசியல் தலைமைகள்,அரச நிருவாகிகள்,பல்வேறு அரச கூட்டங்களில் பல தடவைகள்.,பங்குபற்றியும்,கோரிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக முன் வைத்தும் இதுவரை காலமும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் அல்லது மாற்றுக் காணிகள் எதுவும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே வடகிழக்கு இணைகப்பட வேண்டும் என்ற தமிழ் தேசியத்தின் கோரிக்கைகள் முஸ்லிம் தேசியத்தினை நோக்கி அகல, ஆழ கால்பதிக்க எத்தனிக்க முயலும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்களின் அகற்றப்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இதற்கு முக்கியமாக தமிழ் தேசியத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் புலம்பெயர் தமிழர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் முக்கியமாக கவனத்தில் எடுத்து பங்காற்றி இணையப்போகும் வடகிழக்கில் முஸ்லிம்கள் சுய உரிமையுடன் தங்களது பூர்வீக கிராமங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் நிரந்தரமாக மீள் குடியேறுவதற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலராக செயற்பட்டு வரும் சாட்டோ வை.எல்.மன்சூர் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வேண்டிக்கொள்கின்றார்.