க.கிஷாந்தன்-
ஹப்புதளை தங்கமலை தோட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெலிமடை யூனைடட் அணி வெற்றியீட்டியுள்ளது.
தங்கமலை கிரிக்கட் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இவ் கிரிக்கட் தொடரில் 45 அணிகள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இறுதி போட்டியில் பண்டாரவளை எச்.என்.ஏ அணியை வெற்றிக்கொண்ட யூனைடட் அணி வெற்றி கேடயத்தை தன்வசப்படுத்தியது.
தொடரின் சிறந்த துடுப்பாட்டகாரருக்கான விருதினை சுபாஸ் பெற்றுக் கொள்வதையும் வெற்றிக்கேடயத்தை தலைவர் சுரேஸ்குமார் பெற்றுக்கொள்வதையும் அணியினரையும் இங்கு படங்களில் காணலாம்.