நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
+++++++++++++++++++++
வாய்ப்பேச்சாலே வல்லரசாக்குவோம்.
பச்சத் தண்ணியில் பப்படம் பொரிப்போம்.
எல்லா எம் பிக்கும் ஏரோப் பிளேன் கொடுப்போம்.
நீதி அமைச்சை பீதி அமைச்சாக்குவோம்.
வீதியைத் தோண்டி பாதியை மூடுவோம்
மத்திய வங்கியை கொத்திப் புரட்டுவோம்.
ஞானம் பேசுவதை கேணை போல் கேட்போம்
குடிக்கிற தண்ணிக்கும் அடிப்போம் பல வரி.
விசாரணை என்று உசாராய் உசுப்பேற்றுவோம்.
வில்லனின் எயார்போட்டில் நெல்லுப் போடுவோம்.
மக்கள் குழம்பினால் மையத்தைத் தோண்டுவோம்
இன்னும் தொடரும் எங்கள் சேவை.
.முஹம்மட் நிழோஷ்.