மக்களை ஏமாற்றி அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் கேவலமான நிலைமை நீங்க வேண்டும் -ஷிப்லி பாரூக்





எம்.ரீ. ஹைதர் அலி-

ரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வீதிகளில் இறங்கி செயற்படுவதும், போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதும் எமது சமூகத்திலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகான கல்வி அமைச்சு, மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வினைத்திறன் கண்காட்சி – 2016 காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் 2016.12.28ஆந்நதிகதி - புதன்டைகிழமை (இன்று) நடைபெற்றது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சித்திரவேல், வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் சிகாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

மக்களுக்காக ஆக்கபூர்வமான விடயங்களை செய்துவிட்டு அந்த விடயங்கள் நிறைவேறுகின்றபோது அதனை மக்கள் மத்தியில் சொல்லுகின்றவர்களாக அரசியல் தலைமைகள் இருக்கவேண்டுமே தவிர தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களுக்காக பேசுவது, சிறிய சிறிய உதவிகளை வழங்குவது, போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்வது போன்ற கேவலமான நிலைமை எமது சமூகத்திலிருந்து நீங்க வேண்டும்.

அத்தகைய போலியான வாக்குறுதிகளை உங்களுக்கு கொடுத்து அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்கின்றபோது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் ஐந்து வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமை ஏற்படும்.

மேலும் தற்போது தேர்தலை மையமாகக் கொண்டு வீதிகளில் இறங்கி வேலைசெய்பவர்கள் கடந்த காலங்களில் இந்த சமூகத்திற்காக எதனை செய்தார்கள் என்று சிந்திக்க வேண்டிய ஒரு தேவைப்பாடும் எமக்கு உள்ளது.

இங்கிருக்கக்கூடிய இருநூற்றிட்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் நூறு குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர்கள். நீங்கள் இந்த சமூகத்தின் மிகப் பெரும் சக்தியாகும். எனவே இவ்வாறன கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்தினை இல்லாதொழிப்பதில் உங்களுக்கு மிகவும் பாரிய பொறுப்பு உள்ளது.

தற்போது நாட்டிலே உள்ள அரசாங்கமானது விஷேட அமைச்சர்கள் என்ற ஒரு விடயத்தினை அறிமுகப்படுத்துவதன் ஊடாக மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கி மாகாண சபைகளை எத்தகைய அதிகாரங்களும் அற்ற ஒன்றாக மாற்ற முயட்சித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்த எமது உயிரையும் துச்சமாக மதித்து இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்த பிறகு இவ்வாறு மாகாண சபையின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்வார்களாக இருந்தால் நிச்சயமாக ஒரு போதும் அதற்கு நாங்கள் துணைபோக மாட்டோம் என்பதனை மத்திய அரசாங்கத்திற்கு கூறியிருக்கின்றோம்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்காக கொடுப்பனவு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாங்கள் முயற்சி செய்தபோது மத்திய அரசாங்கத்தின் மூலம் அதனை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. எனவே கடந்த ஆண்டு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது எங்களது செலவீனங்களை குறைத்து முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுக்காக சுமார் 104 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்திருந்தோம். அந்த வகையில் தற்போது வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவினை எமது மாகாண சபை ஆட்சிக்காலத்தில் குறைந்த பட்சம் 10000 ரூபா வரை அதிகரிப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

ஆகவே ஆசிரியர்களான உங்களுக்கு இந்த மாணவர்கள் தொடர்பாகவும் எமது சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அத்தகைய கடமையினை உரிய விதத்தில் முன்னெடுப்பதற்கு எம்மால் முடியுமான அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -