நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர் செய்கை நிலங்கள் குறைந்துள்ளன. இதனால் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனக் கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியினை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியினை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவ்வரிசியினை முறையாக சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
அரிசியின் விலை உயர்வதை தடுப்பதற்காக அரிசி இறக்குமதி - அமைச்சர் ரிஷாட்