திருகோணமலை கெளசிகனின் இரண்டாவது குறும் திரைப்படம். ”மனிதநேயம்” சமூகத்தில் நடக்கும் அசம்பாவிதத்திற்கு எதிராக விரல் சுழற்றி குரல் கொடுக்கவே இந்த குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டது எனலாம்.
இது பற்றி கெளசிகன்:-
”மனிதநேயம்” படம் எத்தனையோ உண்மை சம்பவங்களையும் நான் கேள்விப்பட்டதையும் கொண்டு உருவான படம் இது. இந்த படத்தின் இறுதியில் தந்துள்ள தொலைபேசி எண்கள் எல்லாம் சகல மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கங்கலாகும். இந்த எண்கள் எல்லா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் போய்சேரவேண்டும் என்பதற்காகவும் இதன் மூலம் நடக்கும் அநியாயங்களை தடுக்க முடியும் என்பதற்காகவுமே உருவான படம் தான் இது.
மனிதர்களின் மனிதநேயத்தை வெளிக்கொண்டுவர ஒரு வழி.
உங்களைப்போல் மற்றவர்களும் இதை அறிந்துகொள்ள இக் குறும் படத்தை அனைவருக்கும் பகிருங்கள். நம் எதிர்கால இளைஞர்களுக்காக பகிருங்கள். என தெரிவித்தார்.
நடிகர்கள் : ஆலோசியஸ் ஏன்யளின்
இசை : பிருதிவி
தயாரிப்பு : முரளி & கே. ராஜா
கேமரா : யனுஸ்டான & நிரோஷான்
டிரெக்ட்டிங் எடிட்டிங் : கௌசிகன்