கிழக்கு ஊடகவியலாளர்கள் வட மாகாணத்திற்கான ஊடக பயணமொன்றை எதிர்வரும் புதிய ஆண்டில் ஜனவரி நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ளனர். காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இவ் ஊடக பயணத்தில் 03 நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து அரசியல், சமூக, சமயம், நல்லிணக்கம், இன நல்லுறவு போன்ற விவகாரங்களில் கள ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கும் நாட்களில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், அங்குள்ள ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். மேலும் வட மாகாண ஆளுனர், வடமாகாண முதல் அமைச்சர், எதிர்க் கட்சித்தலைவர் மற்றும் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் இதன்போது சந்திக்க உள்ளனர். வட மாகாணத்தில் உள்ள யுத்த காலங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் குடியேற்ற பிரதேசங்களையும் இவர்கள் பார்வையிட உள்ளனர்.