யாழ் முஸ்லீம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வாழும் முஸ்லீம் மக்களின் அடிப்படை வசதிகளை மென்மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் யாழ் மீள்குடியேற்றத் திட்ட இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் ஆலோசனைகள் வழிகாட்டல் ஊடாக ரீ.எப்.ஆர்.பி (TFRP) திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கான பல்வேறு உட்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான மேற்படி நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உட்கட்டுமான வேலைத்திட்டத்திற்காக மொத்தம் 1.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டங்களில் வீதி அபிவிருத்திகள் சுகாதார மேம்பாடு கல்வி வளையாட்டுத்துறை அபிவிருத்திகள் உள்வாங்கப்பட்டுள்ளது. 

இதில் கமால்வீதி எம்.ஓ வீதி பீ.எஸ் வீதி கலீமா வீதி ஆகிய வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதுடன் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி (ஜின்னா) மைதானத்திற்கு சுற்றுமதில் சுவர் கட்டப்படுவதுடன் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கும் யாழ் கதீஜா மகளிர் கல்லூரிக்கும் தளபாடங்களும் கல்வி முன்னேற்ற உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

இத்துடன் வேலணை மண்கும்பான் பள்ளிவாசல் பொதுக்கிணறும் மலசலகூடமும் நவீன முறையில் திருத்தியமைக்கப்டவுள்ளது. 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் கழிவு முகாமைத்துவ திட்டத்தின் ஊடாக முஸ்லிம் வட்டாரத்தில் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன் அராலி வீதி புதிய சோனகதெரு (பொம்மைவெளியில்) குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் ஏற்படும் நோய்க்காவிகளை மட்டுப்படுத்தும் நோக்கோடு தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவு நீர் குழியமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. 

மேலும் மீள்குடியேறிவரும் மக்களினது காணியைத் துப்புரவு செய்தல்இ கிணறு துப்புரவு செய்தல்இ குழிகளை நிரப்புதல் என்பவற்றிற்கும் தேவையுடையோருக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது. 

மேலும் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக தொழிற்பயிற்சிகளும் தொழில் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

இவற்றிற்கான மேலதிக நிதிகளை தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் அமைச்சர் ரிஷாத் மேற்கொணடுள்ளதாக மௌலவி சுபியான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -