அம்பாறை மாவட்டத்தின் பிரதான கேந்திரமையமாக இருந்து வரும் கல்முனை தொகுதியில் இதுவரைக்கும் ஐ.தே கட்சிக்கு அமைப்பாளர் நியமிக்கப்படாமல் இருப்பது கவலையை தருகிறது. என கல்முனை தொகுதி ஐ.தே கட்சி பிரச்சார செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.
ஐ.தே கட்சியின் மாதாந்த ஒன்றுகூடல் ஒன்று அதன் காரியாலயத்தில் நேற்று(23-11-2016)புதன்கிழமைநடைபெற்றது இங்கு உரையாற்றிய போதே போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-நல்லாட்சி அரசாங்கம் ஆட்ச்சிக்கு வந்து சுமார் 2 வருடம் பூர்த்தியாகும்; காலம் நெருங்கி வரும் இத்தருணத்தில் இதுவரைக்கும் கல்முனை தொகுதிக்கு ஓர் அமைப்பாளர் இல்லாமல் ஐ.தே கட்சி ஆதரவாளர்கள் திண்டாடுகிறார்கள்.
சுமார் 22 வருட காலமாக கல்முனைக்கு ஓர் அமைப்பாளர் இல்லாமல் இருந்து வருகிறது. இடையில் முன்னால் அமைச்சர் மையோன் முஸ்தபா சில காலம் இருந்து வந்தாலும் இன்று அவர் இல்லாமையால் அந்தப் பதவி செயல் இழந்துள்ளது.
கல்முனையில் 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரைக்கும் எந்த விதமான அபிவிருத்திகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஐ,தே கட்சியில் கல்முனை தொகுதிக்கு மையோன் முஸ்தபா அமைப்பாளராக இருந்த காலத்தில் சில வேலைத்திட்டங்கள் நடந்து வந்தது. அதன் பிறகு எவ்விதமான வேலைத் திட்டங்களும் கல்முனை தொகுதியில் இல்லை.
எனவே இன்று நாட்டை ஆண்டு வருகின்ற ஐ.தே கட்சி கல்முனை தொகுதிக்கு ஓர் அமைப்பாளர் நியமிக்காமல் இழுத்தடித்து வருவது வேதனையை தருகிறது. ஐ,தே கட்சி ஆதரவாளர்கள் சொல்லொன்னா துயரத்தில் இருந்து வருவது மட்டும் அல்லாது கல்முனையில் இதுவரைக்கும் எதுவித அபிவிருத்தியும் கூட இல்லாமல் கல்முனை மக்கள் அங்கலாய்ப்பில் உள்ளார்கள்.
ஆகவே கட்சியின் செயலாளர் அவர்களிடம் இது பற்றி பல தடவை கூறியும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கல்முனை தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கிய சட்டத்தரணி அப்துல் ரஸ்ஸாக் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் பெற்றதும் குறிப்பிட தக்கது. எனவே அப்துல் ரஸ்ஸாக் அவர்களுக்கு அமைப்பாளர் நியமனம் வழங்குவதாக உறுதியளித்தும் பயனில்லாமல் உள்ளது.
தாமதமில்லாமல் உடனடியாக அமைப்பாளர் நியமனத்தை வழங்குமாறு கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் அவர்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். இதுபற்றிய மகஜர் ஒன்றினை உடன் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்; அஸ்வான் சக்காப் மௌலானா