எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் டெங்கு நோயினை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி தலைமையில் கடந்த (2016/12/21) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு கல்முனைப் பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்தும் மக்களுக்கு விழிப்பூட்டுவதுடன் டெங்கு நோய் பரவும் இடங்கள் தொடர்பாகவும் விசேட கவனமெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்பாளர் டாக்டர் எம்.தெளபீக், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், பிராந்திய தொற்று நோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி என்.ஆரீப், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகே.எல்.எம்.ரைஸ், அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சமூர்த்தி தலைமைப்பீட பிரதான முகாமையாளர்ஏ.ஆர்.எம்.சாலிஹ், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸின் பாவா, கிராம சேவை நிர்வாக அதிகாரி ஏ.பஸால், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.