எங்களுடைய விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா் பிரதமராகியிருப்பாா் என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அங்கு அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
வட மராட்சி என்றால் படிப்பில் மிகவும் பெயா் பெற்ற ஒரு இடம். உங்களுக்குத் தெரியும் எங்களுடைய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாரன் வல்வெட்டித்துறை அவா் எப்படி இருந்தாா் இன்றைக்கு அவா் இருக்கின்ற எங்களுடைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் பிரபாகரன் போல் ஒரு தலைவரை எடுக்கவே முடியாது. இன்று அவா் இருந்திருந்தால் அரசாங்கத்தில் பிரதமராகவோ, ஒரு உறுப்பினராகவோ இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு துரதிஸ்டவசமாக அது கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவா்,
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்த அழிவை மகிந்த ராஜபக்ஸ முடித்து வைத்ததாக இங்கு சில அரசியல் வாதிகள் பேசுகின்றனா். ஆனால் அவ்வாறு இனவாதம் பேசுவதனால் எங்களுக்கு கிடைப்பதும் கிடைக்காது போய்விடும். இப்படி இனவாதம் பேசாது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எதை பெற்றுக்கொள்ள முடியும் எதை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
தெற்கிலும் சரி வடக்கிலும் சரி இனவாதம் பேசுவதனால் எமது சந்ததிதான் பாதிப்படைகிறது. எமது நல்லாட்சியில் மக்களுக்கான நல்ல விடயங்களே இடம்பெற்று வருகிறது. எனவும் குறிப்பிட்டாா்.